மிளகாய் சேர்க்காமல் சூப்பரான ஒரு கார சட்னி ரெசிபி உங்களுக்காக.

thakkali-chutney
- Advertisement -

காரச் சட்னியில் எத்தனையோ வகைகள் உண்டு. அந்த வரிசையில் இன்னைக்கு நாம ரொம்ப ரொம்ப ஈசியான காரச்சட்னி ரெசிபியை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிளகாய் சேர்க்காத காரச் சட்னியா? அது எப்படி என்று எல்லோருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். மிளகாய் சேர்க்கப் போவதில்லை. சட்னியில் வித்தியாசமாக மிளகாய் தூள் சேர்க்க போகின்றோம். பயப்பட வேண்டாம். சட்னிக்கு சுவையில் எந்த ஒரு குறையும் இருக்காது. வாங்க ஈஸியான சூப்பர் கலர்ஃபுல் சட்னி ரெசிபியை பார்க்கலாம்.

onion1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தோல் உரித்த – 10 பல் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி, தனியாக எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். மீண்டும் அதே கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம் – 2 முழுதாகப் போட்டு, தோல் சுருங்கி வரும்வரை நன்றாக வதக்க வேண்டும். தக்காளி பழத்தில் பச்சை வாடை வரக்கூடாது. முழு தக்காளிப் பழங்களை வதக்குவதால் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு தக்காளியை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். (தக்காளியை வெட்டியும் வதக்கக்கூடாது. சட்னியின் சுவை மாறிவிடும்.)

- Advertisement -

இப்போது வதக்கிய தக்காளி, வதக்கிய சின்ன வெங்காயம், இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதோடு 2 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை, சீரகம் 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சேர்த்து சட்னியில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி கொஞ்சம் திக்காக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

v-chutney4

மிக்ஸியில் இருந்து சட்னியை அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இதற்கு சிறிய தலைப்பு கொடுக்கலாம். நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய், தாளித்துக் கொட்டி கலந்து இட்லி தோசைக்கு பரிமாறுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.

வரமிளகாய் சேர்த்து செய்யும் சட்னியை விட இந்த சட்னிக்கு சுவை கொஞ்சம் அதிகம் தான். வெங்காய சட்னியில் பொட்டுக்கடலை சேர்த்து செய்யும் சட்னி என்பதால் இதுவரைக்கும் நீங்கள் இந்த சட்னியின் சுவையை ருசித்து இருக்கவே மாட்டீர்கள். மிஸ் பண்ணாம நாளைக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -