அந்த காலத்திலிருந்தே பணத்தை சேர்த்து வைப்பதில் இருக்கக்கூடிய சின்ன ரகசியம்! அந்த ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

panam-surukkupai

அந்த காலமாக இருந்தாலும், இந்தக் காலமாக இருந்தாலும், இனி வரக்கூடிய காலமாக இருந்தாலும், பணத்தை சேர்த்து வைப்பதில் இருக்கக்கூடிய பிரச்சனை மட்டும் தீரப்போவதில்லை! என்றே சொல்லலாம். ஆனால், கட்டுக்கட்டாக பணத்தை பீரோவில் வைத்து கட்டுக்கட்டாக, பூட்டி வைப்பதில், இருக்கும் நிம்மதியை விட, தேவையான அளவு பணத்தை வைத்துக் கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதில் இருக்கும் சுகம் அதிகம் என்றே சொல்லலாம்.

cash

இப்படியாக அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள், நம் பாட்டிமார்கள் பணத்தை எப்படி வைத்து, எப்படி செலவு செய்து வந்தார்கள், என்ற ஒரு சின்ன ரகசியத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும், அதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு, பின்பற்றுகிறோமா என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கின்றது. சரி. அது என்ன என்று தெரிந்து கொள்வோம். பின்பற்றியும் பார்ப்போம்! பணமும், நிம்மதியும் சேர்ந்து நிலைத்திருந்தால் சந்தோஷம்தானே.

அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் பணத்தை சுருக்கு பையில் போட்டு தான் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள். அதற்காக இன்றைக்கும், எல்லா பெண்மணிகளும் சுருக்குப் பையில் போட்டு, பணத்தை இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை! அப்படி சொருகிக்கொண்டாலும், தப்பில்லைனு வெச்சுக்கோங்க! இன்றைக்கும் பலபேர் முந்தானையில், பணத்தை சுருட்டி மூடிச்சு போட்டு வச்சிக்கிறாங்க! இப்படி இருக்கிறவங்க கிட்டெல்லாம், பணம் செலவு செய்ய, மீண்டும் மீண்டும் வந்துக்கிட்டே தான் இருக்கு. இது நிதர்சனமான உண்மை. சுருக்குப்பை போல் இருக்கும் துணிப்பையில் போட்டு சேமித்தால் நல்லது. பர்சை விட, டப்பாவை விட, சுருக்குப்பை மேலோங்கியது.

surukkupai

அடுத்ததாக பணத்தை அழகாக அடுக்கி ரப்பர் பேண்ட் போடலாம் அவர்கள் சேகரிக்க வில்லை. பணத்தை சுருட்டி வைத்திருப்பார்கள். இன்றைக்கு அரசாங்கம் நோட்டை மடித்து கசக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறது. வாஸ்தவம் தான். இருப்பினும், ரூபாய் நோட்டுக்கு சேதாரம் இல்லாமல், கட்டுக்கட்டாக நோட்டை வைத்துக் கொள்ளாமல், அதை சுருட்டியபடி வைத்து, ஒரு நூல் போட்டு கட்டி, சுருக்கு பை போல் இருக்கும், சின்ன துணிப்பையில், எடுத்து வைத்துப் பாருங்கள்.

- Advertisement -

அதே போல், இப்படி சுருக்குப் பையில் வைத்திருக்கும் பணத்தை எண்ணி எண்ணி எழுத்து வைக்க இருக்கமாட்டார்கள். நம்முடைய பாட்டிகள்! அப்படியே வைத்து சுருட்டி சுருக்குப் பையில் போட்டு வெச்சிருப்பாங்க! செலவுக்கு, அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க, யாராவது காசு வேணும்னு கேட்டா, அதை எடுத்து பெருந்தன்மையோடு கொடுப்பாங்க! ‘அச்சச்சோ, காசு போயிருச்சு! என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது கிடையாது.’ வராது. தேவைக்கான பணத்தை, மன சஞ்சலம் இல்லாமல், செலவழியுங்கள். இப்படியாக நல்ல மனதோடு நீங்கள் செலவழிக்கும் அந்த பணம், இரட்டிப்பு மடங்காக உங்களுக்கு திருப்பி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

money

நிறைவான பணமும், நிறைவான வாழ்க்கையும், நிறைவான மன அமைதியும் அந்த காலத்தில் இருந்தது. இந்த காலத்தில் பணம் மட்டுமே வேண்டும் என்று, நாம் எத்தனையோ விஷயங்களை செய்கின்றோம். வாழ்க்கையை இழந்து விடுகின்றோம். சற்று சிந்தித்து, பிரச்சனை வராமல் பணம் சம்பாதித்து வாழ்வது எப்படி, என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உங்களது வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் சொத்து என்றைக்குமே மன அமைதியைத் தேடித் தராது. அளவோடு சேர்த்து வைக்கும், பணமும் சொத்தும்தான் என்றுமே நிரந்தரமா அமைதியை தேடித்தரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்க எந்த வேலையை செய்ய சென்றாலும், உங்களுக்கு முன்னாடி, உங்களுடைய துரதிர்ஷ்டம் தான், போய் நிக்குதா? ஒருவாட்டி உங்க கையில இதை எடுத்துட்டு போய் பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam athigam vara Tamil. Panam athikarikka Tamil. Panam peruga in Tamil. Panam sera tips Tamil.