உடல் எடையை குறைக்க, தலைமுடியை கருகருவென வளர செய்ய, இந்த இட்லி பொடியை கூட சாப்பிடலாம். சூப்பரான முருங்கை இலை இட்லி பொடி ரெசிபி உங்களுக்காக.

podi
- Advertisement -

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை. இதை நாம் இப்போது எல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் வாரத்தில் ஒரு முறையாவது இந்த முருங்கைக் கீரையை நம் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை எடுத்துக் கொண்டாலும் தவறு கிடையாது. சரி இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகளும் சாப்பிட மாட்டாங்க. பெரியவர்களும் சாப்பிட மாட்டாங்க. இட்லி பொடி செய்து கொடுத்துப் பாருங்கள் தினமும்  இட்லி தோசைக்கு தொட்டு மணக்க மணக்க ருசிக்க ருசிக்க சாப்பிட்டு விடுவார்கள். முருங்கைக் கீரையில் இட்லி பொடி அரைப்பது எப்படி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ரெசிபியை படிக்கவும்.

செய்முறை

இதற்கு முதலில் நமக்கு 4 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை தேவை. முருங்கைக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக அலசி, தண்ணீரை வடிய வைத்து அப்படியே ஒரு தட்டில் போட்டு மேலே ஒரு வெள்ளை துணியை போட்டு மூடி வெயிலில் கொஞ்ச நேரம் காய வைத்து விடுங்கள். முருங்கைக்கீரையில் ஈரம் இருக்க வேண்டாம். வெயிலில் காய வைக்க வசதி இல்லாதவர்கள் நிழலிலேயே ஃபேன் காற்றிலேயே இதை உலர்த்திக்கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் மிகக் குறைந்த அளவு 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து 1 கப், கடலைப்பருப்பு 1/2 கப், துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், போட்டு வறுக்கவும். இந்த மூன்று பொருட்களும் சரி சருமமாக சீராக வறுபட வேண்டும். அடுத்தபடியாக எள்ளு 1/2 கப் போட்டு அதே கடாயில் பொரிய விட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளவும். காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் வர மிளகாய் 10 போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து தோல் உரித்த பூண்டு பல் 4, சின்ன கோலி கூண்டு அளவு புளி, பெருங்காயம் 1/4 ஸ்பூன், போட்டு அதையும் சூடு செய்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சூடாக இருக்கும் கடாயில் கல்லுப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக பெரிய கோலிக்கொண்டு அளவு வெல்லம் மிகச் சின்ன துண்டு வெல்லத்தை மட்டும் சூடான பேனில் லேசாக இரண்டு முறை வறுத்து அதையும் அப்படியே வறுத்து வைத்திருக்கும் பொருளோடு சேர்க்கவும்.

- Advertisement -

வெல்லம் மிஸ் பண்ணாதீங்க. இந்த பொடிக்கு சுவை தரக்கூடிய பொருளே இந்த வெல்லம் தான். இறுதியாக சூடான கடாயில் ஆற வைத்திருக்கும் முருங்கைக்கீரைகளை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது வறுத்து எடுத்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் சூப்பரான முருங்கைக்கீரை பொடி தயார்.

இதையும் படிக்கலாமே: மீந்து போன சாதம் இனி குப்பைக்கு போக வேண்டாம் சூடான, சுவையான சப்பாத்தி இப்படி கூட தயார் செய்யலாமே! மிருதுவான சாத சப்பாத்தி எப்படி செய்வது?

சுட சுட இட்லி, அதன் மேலே பொடி தூவிக்கோங்க. அது மேல எண்ணெயை ஊத்துங்க. இந்த இட்லியை சுடச்சுட சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, தாளித்து பொடியாக வெட்டிய இட்லிகளை அதில் போட்டு, மேலே இந்த இட்லி பொடியை தூவி அப்படியே பிரட்டி முருங்கைக்கீரை பொடி இட்லி உப்புமா ஆகவும், சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். ஒரு முறை இந்த ரெசிபி முயற்சி செய்து தான் பாருங்களேன். கட்டாயம் திருப்பி திருப்பி இதை செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

- Advertisement -