சின்ன வெங்காயம் தாளித்து நிலக்கடலை சட்னி இப்படி 10 நிமிஷத்துல வச்சி கொடுத்து பாருங்க எவ்வளவு இட்லி கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க!

peanut-verkadalai-chutney
- Advertisement -

நிலக்கடலை சட்னி செய்யும் பொழுது இது போல சின்ன வெங்காயத்தை தாளித்து சேர்த்தால் இன்னும் சூப்பரான டேஸ்டியாக நமக்கு சட்னி கிடைக்கும். எப்போதும் ஒரே வகையான சட்னி செய்து கொடுத்து போரடித்து போனவர்களுக்கு இது போல நிலக்கடலை சட்னி செஞ்சு கொடுத்து பாருங்க ரொம்பவும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த சின்ன வெங்காயம் தாளித்த நிலக்கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

நிலக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நிலக்கடலை – அரை கப், வரமிளகாய் – 2, பூண்டு பல் – 3, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தேங்காய் துண்டுகள் – அரை கப், தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

நிலக்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
நிலக்கடலை சட்னி செய்வதற்கு முதலில் அரை கப் அளவிற்கு நிலக்கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். நிலக்கடலையை முதலில் வெறும் வாணலியில் போட்டு லேசாக சிம்மில் வைத்து வறுக்கவும். அப்பொழுது தான் நிலக்கடலை சூடு ஏறி அதில் இருக்கும் தோல் தனியாக பிரிந்து வரும். பின்னர் லேசாக ஆறியதும் கைகளால் தேய்த்தால் எல்லா தோலும் உரிந்து வந்துவிடும். பிறகு ஊதினால் எல்லாமே பறந்து விடும். இப்படி வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மிளகாயை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்த இந்த மிளகாயை மிக்ஸியில் சேர்க்க வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் மூன்று பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து வறுத்து அதையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அரை கப் அளவிற்கு நறுக்கி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது தேங்காயைத் துருவியும் சேர்க்கலாம். பின்னர் மிக்ஸியை இயக்கி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலக்கடலை சட்னிக்கு கூடுதலாக சுவையை கொடுப்பது இந்த சின்ன வெங்காயம் தான்! சின்ன வெங்காயத்தை இரண்டு ஸ்பூன் அளவிற்கு பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். 2 அல்லது 3 சின்ன வெங்காயம் எடுத்து தோலுரித்து நறுக்கி வைத்தால் சரியாக இருக்கும். சின்ன வெங்காயத்தை லேசாக பொன்னிறமாக வறுத்த பின்பு நீங்கள் அரைத்து வைத்த நிலக்கடலை சட்னியை அதில் ஊற்றி ஒரு நிமிடம் நன்கு வதக்கி விடுங்கள். அப்போது பச்சை வாசம் நீங்கிவிடும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து சுட சுட இட்லி, தோசையுடன் பரிமறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -