ஒரே நாளில் வெற்றி, வீர நடை போட்டுக்கொண்டு உங்கள் வீட்டுக்குள் நுழையும். இந்த மாலையை ஒரு முறை நில வாசப்படியில் கட்டி தான் பாருங்களேன்!

hanuman
- Advertisement -

வெற்றி என்ற ஒன்றை தங்களுடைய வாழ்க்கையில் பார்க்காத பல பேர் இன்னும் இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். வெற்றியும் வாய்ப்புகளும், வாசல் வரை வரும். வீடு தேடி வரும். ஆனால் வீட்டிற்குள் வராது. நிறைய சந்தர்ப்பங்களில் ‘இந்த ஒரு விஷயம் நடந்து விட்டால் போதும்’ வாழ்க்கையில் நான் எங்கேயோ போய் விடுவேன்! என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஒரு விஷயம் நடக்காமல், மீண்டும் மீண்டும் காலமும் நேரமும் அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். பரவாயில்லை, முன்னேற்றம் அடையாமல் கீழ் மட்டத்திலிருந்து, விழுபவர்கள் சீக்கிரமாக எழ முடியும். விரைவாக முன்னேற்றம் அடைந்து, வெற்றியின் உச்சிக்கு சென்று விட்டு உயரத்திலிருந்து விழுந்தால் தான் அடி பலமாக விழும், என்று சொல்லுவார்கள்.

sky-sad-man

வெற்றி கிடைப்பதற்கு முன்பாகவே, ஆரம்ப காலத்தில் கஷ்டங்களை சந்திப்பவர்களுக்கு, வெற்றி கிடைத்த பின்பு பெரிய கஷ்டங்கள் எதுவும் வராது. அந்த வெற்றியும் நிலைத்து நிற்கும். இதுதான் இயல்பு. சரி, உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளும், வாய்ப்புகளும் வருகிறது. ஆனால், கைக்கு வருவதற்கு முன்பே காணாமல் போகின்றதா? ஏதோ ஒரு தொழிலை தொடங்குகிறீர்கள். ஆரம்பம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், முடிவில் லாபம் கிடைப்பது கிடையாது.

- Advertisement -

வேலை தேடி செல்வீர்கள். 4 ரவுண்டில் இன்டர்வியூவில் கலக்கி இருப்பீர்கள். 5 வது ரவுண்டில் வேலையை நழுவவிட்டு இருப்பீர்கள். கடினமான நான்கு பாதையை கடந்து வந்த உங்களால், சுலபமான இறுதி பாதையை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். காலமும் நேரமும் சூழ்நிலையும் உங்களை வாட்டி வதைக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

vetrilaai

இந்தப் பரிகாரத்தை பிரச்சனை உள்ளவர்களும் செய்யலாம். பிரச்சனை இருப்பவர்களுடைய தாய் தந்தையரும், தங்களுடைய வீட்டில் செய்யலாம். ஆன்மீக ரீதியாக ஹனுமனை வேண்டி, வெற்றியைத் தரும் வெற்றிலையில் செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது. வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

- Advertisement -

5, 7, 11 இப்படி ஒற்றைப்படையில் வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். காம்பு பகுதியில் நூல் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். மாவிலை தோரணம் போல வெற்றிலை தோரணம் கட்டி, உங்கள் நில வாசப்படியில் கட்ட வேண்டும். இந்த வெற்றிலை மாலை நில வாசப்படியில் கட்டி ஒரு நாள் தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அடுத்த நாள் வெற்றிலை வாடிவிடும் வாடிய வெற்றிலையை வாசலில் கட்டக் கூடாது.

nila-vasal1

வெற்றிலை மாலையை காலை நேரத்தில் கட்டி, உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும், நீங்க வேண்டும். வெற்றி வாசல்படியை தாண்டி வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற வேண்டுதலோடு கட்டி விடுங்கள். அவ்வளவு தான். அடுத்த நாள் காலை இந்த வெற்றிலை மாலையை கழட்டி, கொஞ்சமாக தண்ணீரை எடுத்து அதனுள் இந்த வெற்றிலைகளை நனைத்து அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.

- Advertisement -

hanuman-heart

தண்ணீருக்குள் இருக்கும் வெற்றிலையை எடுத்து ஆடு மாடுகளுக்கு சாப்பிட கொடுத்து விடலாம். அந்த தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் பொடியைக் கலந்து, உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி விடும். வெற்றி உங்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்ளும். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைப்பதை உணரமுடியும்.

இதையும் படிக்கலாமே
ராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா? ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -