நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா? அவை உடனே நடைபெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம்

thengai
- Advertisement -

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று பலவித சுபகாரியங்கள் விரைவில் நடக்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் இவ்வாறான காரியங்கள் நடப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவை நிறைவேறாமல் பல தடைகள் வந்து கொண்டிருக்கும். இதற்கு காரணம் குலதெய்வத்தின் அருள் நமக்கு இல்லாமல் இருப்பதும் அல்லது நவக்கிரகங்களின் தோஷம் இருப்பதுமாகும். இவ்வாறு காரிய தடைக்கான தோஷங்களை சரிசெய்ய இந்த தேங்காய் விளக்கு பரிகாரத்தை வீட்டில் முறையாக ஏற்றி வணங்கினாலே போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

home

இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதார வணங்கி, தங்களது வீட்டில் பூஜை செய்து வருகிறார்கள். அவ்வாறு நாம் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆனால் எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை நினைத்து படையலிட்டு பூஜித்த பிறகு தான் அந்த காரியத்தை துவங்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் வழிவழியாக பூஜித்து வரும் குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். இதனை காலப்போக்கில் ஒரு சிலர் மறந்துவிடுகின்றனர். மற்றும் ஒரு சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்று கூட அறியாமல் இருக்கின்றனர். நமது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில் நமக்கு ஓடோடி வந்து நிற்பது நமது குலதெய்வம் மட்டுமே. எனவே நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தெய்வம் குலதெய்வமாகும்.

kuladheivam

மாதத்திற்கு ஒரு தடவையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை பூஜித்து வரவேண்டும். அப்படி இல்லையென்றால் 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை அப்படியும் முடியாதவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். அண்ணன், தம்பி, உற்றார், உறவினருடன் ஒன்று சேர்ந்து குலதெய்வத்தை வணங்கி வந்தால் நாம் வேண்டிக் கொள்ளும் காரியம் நிச்சயம் நடைபெறும்.

- Advertisement -

இவ்வாறு குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இந்த பூஜை செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளைப் பெற முடியும். அவ்வாறு ஒருவருடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி அன்றும், பெண் தெய்வமாக இருந்தால் அமாவாசை அன்றும் இந்த தேங்காய் விளக்கு பூஜையை செய்ய வேண்டும்.

thengai-

அதற்கு முதலில் பூஜை அறையின் முன் குல தெய்வத்தின் படத்தை வைக்க வேண்டும். குலதெய்வபடம் இல்லாதவர்கள் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சுத்தமான தேங்காயை இரண்டாக உடைத்து அதற்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன் மீது இரண்டு கைப்பிடி பச்சை அரிசியை வைத்து கொண்டு, இரண்டு தேங்காயையும் அதில் வைத்து விட வேண்டும். பின்னர் இரண்டு தேங்காய்களிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றிலும் கணவன் மனைவி என இரு திரிகள் போட்டு, தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார வணங்கி, நாம் செய்யவிருக்கும் காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -