நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் காரியங்களை பட்டென முடித்து வைக்க ஒரு கைப்பிடி பச்சை பயிறு போதும்.

amman2
- Advertisement -

சில வேலைகளை கையில் எடுக்கும் நேரம் நடந்ததா, முடிந்ததா என்று இருக்கவே இருக்காது. இழுக்கும் இழுக்கும் இழுபறியாகவே இருக்கும். நாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு இது நமக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகத்தோடு தொடங்கக்கூடாது. இதில் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்கினால் அந்த காரியம் முழுமையான வெற்றியைப் பெறும். ஆரம்பத்திலேயே அரைகுறை மனதோடு நாம் சில விஷயங்களை தொடங்கும் போது, நம்முடைய எண்ணமே நம்முடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடும். ஆகவே இனி எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் முழு வெற்றி நமக்குத் தான் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

சரிங்க, இப்படி தான் மனதில் நினைத்துக் கொண்டு நம்பிக்கையோடு முயற்சிகளை செய்தாலும், புதிய முயற்சியில் எனக்கு வெற்றியே கிடைப்பதில்லை. தோல்வி என்ற ஒன்றை மட்டும் தான் வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்பவர்கள் இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி தரும். நிச்சயமாக இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கும் நல்ல காரியங்கள் கூட பட்டென ஒரு முடிவுக்கு வந்து விடும். அது உங்களுக்கு சாதகமாக முடிந்தாலும் சரி பாதகமாக முடிந்தாலும் சரி. குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துவிடும். (வெறும் தொழில் சம்பந்தப்பட்ட, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, உங்களுடைய சொந்த விஷயங்கள், சண்டை சச்சரவு, கோர்ட் கேஸ் வழக்குகள் இப்படி எந்த குழப்பமான பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க இந்த பரிகாரம் கை மேல் பலனை கொடுக்கும்.)

வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதற்கு முன்பாக ஒரு கைப்பிடி அளவு பச்சைப்பயிரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் பச்சை பயிரை எடுத்துக்கொண்டு உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி ஒரு பச்சை நிற துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் எந்த காரியத்திற்காக வெளியே கிளம்புகிறீர்களோ குறிப்பிட்ட விஷயத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த ஒரு காரியம் நல்லபடியாக உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இழுப்பறியாக இழுத்து கொண்டே வரும் ஒரு பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைத்துவிடும். மீண்டும் வீடு திரும்பிய பின்பு பச்சைத் துணியில் முடிந்து வைத்திருக்கும் பச்சை பயிரை எடுத்து பசு மாட்டு தொட்டியில் போட்டு விடலாம். அல்லது காக்கை குருவிகளுக்கு இரையாக போடலாம். (நீங்கள் சென்ற காரியம் உங்களுக்கு சாதகமாக நடந்தாலும், அப்படி சாதகமாக நடக்கவில்லை என்றாலும் மீண்டும் வீடு திரும்பிய பின்பு பச்சைப்பயிரை வீட்டில் இருந்து அகற்றி விட வேண்டும்.)

ஒரே ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்து விட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். இந்த பரிகாரத்தை செய்து இன்று ஏதோ ஒரு நல்ல விஷயத்தை தொடங்குகிறீர்கள். அந்த விஷயம் ஏதோ ஒரு காரணமாக முதல் முறை தடைப்பட்டு விட்டது என்றால், மீண்டும் சில நாட்கள் கழித்து அதே ஒரு விஷயத்திற்காக முயற்சி செய்கிறீர்கள் என்றால், மீண்டும் அந்த நல்ல விஷயத்திற்காக செல்லும்போது இதே பரிகாரத்தை மீண்டும் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து முயற்சி செய்யும் போது உங்களுக்கு பச்சைப்பயிறு பரிகாரம் ஒரு சில நாட்களில் முழு பலனை கொடுக்கும். நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -