வராகித் தாயை வசியம் செய்து, வேண்டிய வரங்களை உடனடியாக பெற, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இந்த ஒரு விளக்கு ஏற்றினால் போதும். வாராஹித் தாயே வந்து உங்கள் பூஜை அறையில் அமர்ந்து கொள்வாள்.

varahi-vilakku
- Advertisement -

தெய்வத்தையே வசியம் செய்வதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே வேறு. நீங்கள் செய்யக்கூடிய பூஜையில் வாராஹித்தாய் மனம் குளிர்ந்து உங்களுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் கேட்ட வரங்களை உடனே கொடுக்க, உங்களுடைய பக்தியை பார்த்து, பக்திக்கு மனம் இறங்கி, உங்கள் வீட்டிற்குள் வராகித்தாயை வர வைக்கக்கூடிய வழிபாட்டை தான் வசியம் என்று சொல்கின்றோம். ஆக வசியம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். வாராகி தாயை வசியம் செய்ய எளிமையான ஆன்மீகம் சார்ந்த இறை வழிபாடு இதோ உங்களுக்காக.

வாராஹி அம்மன் வசிய பூஜை – Varahi Amman vasiya Pooja
உக்கிரமான தாய் தான் அவள். ஆனால் குழந்தை உள்ளம் கொண்டவள். கேட்ட வரங்களை உடனடியாக, கேட்ட உடனே கொடுத்து விடுவாள். இந்த வாராஹிதாய் வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்வது மிக மிக சிறப்பு. உங்களுக்கு தீராத கஷ்டம் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்ய, பின் சொல்லக்கூடிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். கட்டாயமாக அசைவம் சாப்பிட்டுவிட்டு இந்த வழிபாட்டை செய்ய முடியாது. வழிபாடு செய்து விட்டு அசைவம் சாப்பிடக் கூடாது.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 அப்படி இல்லையென்றால் மதியம் 12:00 மணியிலிருந்து 1:00 அப்படி இல்லை என்றால் இரவு 7:00 மணியிலிருந்து 8:00 இந்த நேரங்களில் பின் சொல்லக்கூடிய வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் வாராகி தாயின் திரு உருவப்படம் இருந்தால் அல்லது சிலை இருந்தால் அதற்கு முன்பு இந்த வழிபாட்டை செய்யலாம். திருவுருவப்படம் சிலை இல்லாதவர்கள் வாராகி தாயை மனதார நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பூஜை அறைக்கு புதுசாக பூக்களை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு பாக்கு மட்டை தட்டில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி வைத்து, அதன் மேலே இரண்டு மண் அகல் விளக்குகள் வைத்து, நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது சிறப்பு. நெய் ஊற்ற முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று வாராகி தாயை நினைத்து அகல் விளக்கில் சிவப்பு நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றினால், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும். வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். விடாமல் நம்மை துரத்திக் கொண்டிருக்கும் நோய்நொடி பிரச்சனை நம்மை விட்டு விலகும். வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும்.

குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கக் கூடாது குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும் என்பவர்கள் பச்சை நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றலாம். பண பிரச்சனை தீர, வறுமை நீங்க, கடன் தொல்லை தீர, ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய திரியை போட்டு வாராகி அம்மனுக்கு விளக்கு ஏற்றலாம். இப்படி திரியின் நிறம் எல்லாம் எங்களுக்கு தெரியாது. அதையெல்லாம் வாங்க முடியாது என்பவர்கள், எப்போதும் போலவிளக்கு ஏற்ற பயன்படுத்தும் வெள்ளை திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வராகி தாய்க்கு கிழங்கு வகைகள் நிவேதனமாக வைப்பது சிறப்பு. சக்கரவள்ளி கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, எதுவுமே கிடைக்கவில்லை என்றால் உருளைக்கிழங்கை அவித்து கூட வாராகி தாய்க்கு வைத்து வழிபாடு செய்யலாம். ஒரு டம்ளர் பானகம் வைப்பது சிறப்பு.

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நிவேதனம் படைத்துவிட்டு விளக்குக்கு முன்பு அமர்ந்து வாராகி தாயின் இந்த காயத்ரி மந்திரத்தை உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரித்து, இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். வெளியில யாராவது குழந்தைகள் இருந்தால் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாம். தவறு கிடையாது.

வராகி அம்மன் காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே: விழுந்து போன வாழ்க்கையை மீட்டெடுக்க இந்த மூன்று இலை போதும். இந்த மூன்று இலை உங்கள் கையில் இருந்தால் போதும் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பித்து விடலாம்.

இந்த பூஜையில் கிடைக்கக்கூடிய மன நிறைவை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தால் தான் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பூஜையை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -