பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரம்

bairava-money
- Advertisement -

பொதுவாகவே அஷ்டமி திருநாள் என்பது மாதத்திற்கு இரண்டு முறை வரக் கூடியதாகும். முதலில் அமாவாசை முடிந்து எட்டாவது திதி அன்று வரக்கூடிய அஷ்டமி திதியை சுக்லபட்ச அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று அழைக்கிறோம். இரண்டாவதாக பவுர்ணமி முடிந்து வரக்கூடிய எட்டாவது திதி தேய்பிறை அஷ்டமி அல்லது கிருஷ்ணபட்ச அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியை அந்தந்த மாதங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கின்றோம். அதன்படி மார்கழி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை அஷ்டமியை சங்கராஷ்டமி என்று அழைக்கிறோம். இந்த சங்கராஷ்டமியின் சிறப்புகள் பற்றியும், இந்த தினத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இன்றைய நாளில் செய்யப்படும் பரிகாரங்களுக்கு நிச்சயமான பலன் கிடைக்கப் படுகிறது.

sivan

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சகலவிதமான உயிரினங்களுக்கும் சிவபெருமான் படி அளப்பதாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் இறைவன் நமது வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கிறார். எனவே இன்றைய தினத்தில் தானங்கள் செய்வதன் மூலம் நமது இல்லங்களில் உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை வருவதால் சோமவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

சிவபெருமானுக்கு மட்டுமல்லாமல் இன்றைய நாள் பைரவருக்கு உகந்த நாளாக இருப்பதால் சிவபெருமான், பைரவர் இவர்கள் இருவரையும் சேர்த்து வணங்குவதன் மூலம் இருவருமே நமக்குத் தேவையான வரங்களை அள்ளித் தருகின்றனர். இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியின் சிறப்புகள் பற்றி புராணக் கதைகள் கூறுகின்றன.

swarna-bairavar2

சிவபெருமான் தினமும் உயிரினங்களுக்கு படி அளப்பது வழக்கம். அதனை பார்வதிதேவி சோதிக்கும் வகையில் ஒரு எறும்பை பிடித்து ஒரு பாட்டலில் அடைத்து வைக்கிறார். சிவபெருமான் அனைத்து உயிரினங்களுக்கும் படி அளந்து திரும்பி வரும்பொழுது பார்வதி தேவி அவரை ஏளனமாக பார்த்து அனைத்து உயிர்களுக்கும் இன்று உணவு அளித்து விட்டீர்களா என்று கேட்கிறார்.

- Advertisement -

அதற்க்கு சிவபெருமானும் ஆம் என்று பதில் அளிக்கிறார். உடனே பார்வதி தேவி சிரித்துக்கொண்டே அந்த பாட்டிலில் இருக்கும் எறும்பை பார்க்கும்போது அது ஒரு அரிசியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். உடனே பார்வதி தேவி தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். இந்த சம்பவம் நடந்த தினமும் இந்த அஷ்டமி தினம் தான். எனவே இன்றைய தினத்தில் அனைத்து உயிர்களுக்கும் தான் வேண்டியது நிச்சயம் நடக்கும்.

ant1

இந்த தேய்பிறை அஷ்டமியில் வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி பச்சை அரிசியை எடுத்துக் கொண்டு, சிவபெருமான் கோவிலுக்குச் சென்று, அங்கு அதனை பித்தளை, வெள்ளி அல்லது செம்புத் தட்டில் வைத்து, சிவபெருமானின் முன் வைத்து, பூஜை செய்துவிட்டு, அந்த அரிசியை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து அரிசிப் பானையில் சேர்த்து விடுவதன் மூலம் நமது தலைமுறையினருக்கும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை இதனை தொடர்ந்து செய்வது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கிறது.

thirusti-red-mottai

கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பைரவர் சன்னதியில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அதில் ஒரு சிவப்பு நிற துணியில் 27 மிளகுகளை மூட்டையாக கட்டி அதனை விளக்கில் வைத்து தீபமேற்ற வேண்டும். இதன் மூலம் உங்கள் கடன்கள் அனைத்தும் கரைய ஆரம்பிக்கும். அதுபோல் பணம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் கோவிலுக்கு சென்று வந்த உடனே நமது இல்லத்தில் ஒரு சிவப்பு நிற வஸ்த்திரத்தில் 5 மிளகு, சிறிய துண்டு பச்சை கற்பூரம் இவை இரண்டையும் மூட்டையாக கட்டி, அதனை பூஜை அறையில் இருக்கும் சிவபெருமான் அல்லது பைரவரின் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு, பின்னர் அதனை பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மிடம் பணம் சேர ஆரம்பிக்கும்.

- Advertisement -