நாளை வெற்றிலையின் மேல் இந்த 1 பொருளை, இப்படி தடவி, பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் போதும். உங்கள் வீட்டில் பணம் கொட்டோகொட்டுன்னு கொட்டும்.

vetrilai-cash

பணம் நம் வீட்டில் பணப் பெட்டியில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது, பணத்தை சம்பாதிப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பது தான். முயற்சியே செய்யாமல் வெறும் பரிகாரத்தை மட்டும் செய்தால் அது நமக்கு பலன் தராது‌. முயற்சிகளில் ஏற்படக்கூடிய தடைகளை தகர்த்தெறிய தான், பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நிறைய பேர் இதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். வேலையே செய்யாமல் பணப்பெட்டியில் இதை வைத்துவிட்டால் பணம் வந்துவிடும் என்பதெல்லாம் நிச்சயமாக மூடநம்பிக்கை.

money1

விடாமுயற்சியோடு, நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவான முன்னேற்றத்தை நம்மால் பெற முடியும். நம்முடைய முன்னேற்றத்தில் வரக்கூடிய தடைகளை தகர்த்தெறிய, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்க, பல வழிகள் ஆன்மீக ரீதியாகவும், தாந்திரீக ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஒரு சுலபமான தாந்திரீக பரிகாரத்தை இன்று தெரிந்து கொள்வோமா?

நாளை சித்திரை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை. கூடவே சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாள் அதி அற்புதம் வாய்ந்த நாள். வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய தினம் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஓரை வரும். அந்த 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும்.

deepam

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் முழுமுதற்கடவுளான விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பண தடைகளை நீக்க இந்த பரிகாரத்தை செய்ய ஒரே ஒரு வெற்றிலை, சிறிய துண்டு கஸ்தூரி மஞ்சள் சக்கை, சிறிய துண்டு கருமஞ்சள், சிறிதளவு தேன் இந்த பொருட்கள் இருந்தாலே போதும்.

- Advertisement -

கஸ்தூரி மஞ்சள் சக்கையையும், கரு மஞ்சளையும் இழைப்பதற்கு ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் இழைக்கும் கல் இருந்தால் கூட போதும். இந்த பரிகாரத்தை பூஜை அறையிலேயே அமர்ந்து தான் செய்ய வேண்டும். முதலில் தயாராக எடுத்து வைத்திருக்கும் கல்லில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கஸ்தூரி மஞ்சள் சக்கையையும், கருமஞ்சலையும் இழைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

kashturi-manjal

அடுத்தபடியாக வெற்றிலையை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, அந்த வெற்றிலையின் மேல், முதலில் சிறிதளவு நெய்யை தடவி விட்டு, அந்த கல்லில் இழைத்து வைத்திருக்கும் கரு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் எடுத்து வெற்றிலையில் தடவி கொள்ளுங்கள். (வெற்றிலையின் மேல், நெய், கஸ்தூரி மஞ்சள் விழுது, கருமஞ்சள் விழுது,) இந்த மூன்று பொருட்களையும் லேசாக தடவி வெற்றிலையைச் சுருட்டி மடித்து ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி, அப்படியே உங்கள் வீட்டில் பணப் பெட்டியில் வைத்து விடுங்கள்.

இந்த முடிச்சு மூன்று நாட்கள் உங்கள் வீட்டு பண பெட்டியிலேயே இருக்கட்டும். அதன் பின்பு அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்கள் பணப்பெட்டியில் பணம் சேராமல் இருக்க காரணமாக இருக்கும் கெட்ட சக்திகளை இந்த வெற்றிலை முடிச்சு மூன்றே நாட்களில் வெளியேற்றி இருக்கும். திரும்ப திரும்ப இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. எப்போதெல்லாம் உங்களுக்கு பண விரையம் ஏற்படுகின்றதோ, பண கஷ்டம் வருகிறதோ அப்போது ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் இப்படி செய்து கொண்டால், அதன் பின் பல நல்ல பலன்கள் உங்களை தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.