பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்

mahalakshmi veen viraiyam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பது பெரும் பாடு என்றால் சம்பாதித்த பணத்தை சேமித்து பெருக்குவது அதை விட பெரும்பாடு. சிலர் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்ல வருமானமும் வந்து கொண்டே இருக்கும். ஆனால் வீட்டில் ஒரு ரூபாய் கூட தாங்காது. ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். இப்படி பணம் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால் அடுத்த நிலைக்கு முன்னேறுவது முடியாத காரியம்.

பணம் வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே பணம் சேர தொடங்கி விடும். இந்த வீண் விரயத்தை தடுக்கவும் பணம் வீட்டில் சேரவும் அமாவாசை அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை கோமதி சக்கரம் வைத்து இந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வழிபாடு பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் வீண்விரயம் ஆகாமல் பெருக பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய 11 கோமதி சக்கரம் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு சாதாரணமான கோமதி சக்கரம் வாங்கினாலே போதும். விலை உயர்ந்த கோமதி சக்கரங்கள் வாங்க வேண்டாம். அடுத்து ஒரு சிகப்பு நிற துணி மஞ்சள் நிற துணி வாங்கி கொள்ளுங்கள். இந்த இரண்டு துணியும் நல்ல பளபளப்பான ஷைனிங் துணியாக இருக்க வேண்டும். இந்த பூஜையை நாளைய நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யுங்கள்.

அடுத்து மகாலட்சுமி தாயாரின் பூஜைக்கு தேவையான பூக்கள் சந்தனம் குங்குமம் போன்றவற்றையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 11 கோமதி சக்கரத்தையும் மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தாயாரை எப்படி வழிபாடு செய்வீர்களோ அது போல வழிபாடு செய்து விடுங்கள். சிகப்பு நிற துணியையும் பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்

- Advertisement -

இது நாளை இரவு முழுவதும் பூஜையறையில் இருக்கட்டும். மறுநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் இருக்கும் இந்த கோமதி சக்கரத்தை வெளியில் எடுத்து விடுங்கள். பதினோரு கோமதி சக்கரத்தில் முதலில் நான்கு கோமதி சக்கரத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே நான்கு மூலையிலும் மண் தோண்டி புதைத்து விடுங்கள்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் இதை செய்ய முடியாது. அப்படியானவர்கள் நான்கு மூலையிலும் ஏதாவது ஒரு இடத்தில் யாரும் கைப்படாதவாறு தூக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்து மூன்று கோமதி சக்கரத்தை பூஜை அறையில் இருக்கும் சிகப்பு நிற துணியில் கட்டி உங்கள் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்படி வைக்கும் போது மகாலட்சுமி தாயாரின் மனதார வேண்டிக் கொண்டு வையுங்கள். இப்போது ஏழு கோமதி சக்கரங்களை நாம் பயன்படுத்தி விட்டோம். மீதிம் இருக்கும் நான்கு கோமதி சக்கரத்தில் மூன்றை அதே மஞ்சள் நிற துணியில் கட்டி பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

கடைசியாக ஒன்று மீதம் இருக்கும் இதை சிவாலயத்தில் இருக்கும் உண்டியலில் போடுவது சிறப்பு அப்படி இல்லாத பட்சத்தில் வேறு ஏதாவது சிறப்பு வாய்ந்த கோவில் இருந்தால் அந்த உண்டியலில் இந்த கோமதி சக்கரத்தை சேர்த்து விடுங்கள். இந்த கோமதி சக்கரத்தை அடிக்கடி மாற்ற வேண்டியது கிடையாது அப்படியே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: நன்மைகள் தரும் குலதெய்வ வழிபாடு

இந்த பரிகாரத்தை நாளை செய்ய தவறி விட்டால் அடுத்த மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் நல்ல பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -