இந்த பருப்பு இட்லி பொடி ஒன்று மட்டும் வீட்டில் இருந்தால் போதும், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட சட்னி, சாம்பார் என்பதே தேவைப்படாது

idli-podi
- Advertisement -

இன்றைய அவசர உலகத்தில் நமது தேவைக்கு ஏற்ப உடனடியாக செய்யக்கூடிய உணவுகள் இருந்தால் மட்டுமே சில நேரங்களை சரியாக சமாளிக்க முடியும். அவ்வாறு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி, சாம்பார் செய்வதற்கு நேரம் இல்லாமல் போனால், இந்த பருப்பு மிளகாய் பொடி ஒன்று வீட்டில் இருந்தால் மட்டும் போதும். இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை நேரம் கிடைக்கும் நேரத்தில் சரியான பக்குவத்தில் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் போதும், அவசரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பருப்பு இட்லி பொடி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இட்லி பொடி வகை,  இதனை இட்லி மட்டுமல்லாமல் சுடு சாதத்துடன் சேர்த்து, நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  பொதுவாக  குழந்தைகள் காரமான இட்லிபொடி சாப்பிடமாட்டார்கள்,  ஆனால் பருப்பு இட்லி பொடி அவ்வளவாக காரம் இருக்காது, அதே சமயத்தில் சுவையும் மணமும் நன்றாக இருக்கும் சிறு குழந்தைகளும்  விரும்பி உண்பார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/4  கப், துவரம் பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், சீரகம் – 2  ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, கல்லுப்பு – 1/2  ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில் 1/4  கப் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.  மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும். அதே பேனில் 1*4  கப் துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  மிதமான  தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

இப்பொழுது 1/4  கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  குறைவான தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் 2 ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும், 15  காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பிறகு நன்றாக ஆறவிடவும்.

- Advertisement -

ஆறிய பின்னர் சுத்தமான மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனை ஓரளவு நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு சுத்தமான டப்பாவில் வைத்தால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். கடலைப்பருப்பு, துவரம் பருப்பு,  பாசிப்பருப்பு,  போன்றவற்றை மிதமான தீயில் வைத்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வறுக்கும் பொழுது தீ குறைவாக வைத்துக் கொள்ளவும் அல்லது மிளகாய் கருப்பாகி விடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு பொடி  அரைக்கும் பொழுது சற்று நைசாக அரைத்துக் கொள்ளவும்,  இட்லி பொடி கொரகொரப்பாக இருக்கும் ஆனால்  பருப்பு பொடி சற்று நைசாக இருந்தால் சுவையாக இருக்கும். ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, சுத்தமான டப்பாவில் வைத்தால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

- Advertisement -