செய்த பாவத்தை போக்கும் 3 இலை பரிகாரம்

sivan3
- Advertisement -

தெரிந்தே செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அந்த பாவத்தில் பாதி குறைந்து விடும். முழுசாக குறையாது. செய்த பாவத்திற்கான கர்ம வினைகளை அனுபவத்தை தான் ஆக வேண்டும். இதுதான் நம்முடைய ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள விதி.

அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டு. அதற்கும் ஒரு சதவிகிதம் மன்னிப்பு மட்டும் தான் கிடைக்கும். தவிர முழுசாக மன்னிப்பை இறைவனிடம் எதிர்பார்க்க முடியாது. சில பாவங்களை நாம் செய்யும்போது, நாம் செய்த புண்ணிய கணக்குகளும் காணாமல் போய்விடும் என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு இதை படிங்க. சில தேர்வுகளில் விடை எழுதாவிட்டால், மதிப்பு குறையும். இது ஒரு விதி என்றால், சில தேர்வுகளில் தவறாக விடைகளை எழுதினால், அதற்கான மார்க் மைனஸில் செல்லும்‌. கேள்விப்பட்டிருக்கீங்களா. அதேபோல்தான் நீங்கள் செய்யக்கூடிய பாவ கணக்குகளும்.

மனதறிந்து யாருக்கும் துரோகம் செய்யாதீங்க. நம்முடைய மனதால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அதற்கு ஒரு புண்ணியம். அடுத்தவர்களுக்கு அந்த நல்லதை செய்து விட்டால் அதற்கு ஒரு புண்ணியம். அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்தாலும் அது ஒரு புண்ணிய கணக்கு தான்.

- Advertisement -

ஆனால் அடுத்தவர்களுக்கு கெட்டதை நினைத்தால், அந்த கெட்டதை செய்தால், அந்த கெட்டதால் அந்த குடும்பம் கஷ்டப்பட்டால், அந்த பாவத்தை எங்கு சென்றும் நம்மால் கழிக்கவே முடியாது. சரி, இதெல்லாம் உங்களுக்கு புரிந்ததோ இல்லையோ, இப்போது சொல்லக்கூடிய பரிகாரம் புரியணும். சரி கர்மா கரைய, செய்த பாவத்திற்கு கொஞ்சமாவது மன்னிப்பு கிடைக்க, எப்படி பரிகாரம் செய்வது.

செய்த பாவங்கள் குறைய பரிகாரம்

உங்கள் வீட்டிலேயே அமைதியாக இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் இந்த 3 இலைகளை வைத்துக் கொள்ளுங்கள். அரச இலை, மாதுளை இலை, மா இலை.

- Advertisement -

இந்த மூன்றையும் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி ஈசனை நினைத்து இறைவா நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அறியாமல் செய்த பாவத்திற்கு என்னை மன்னித்துவிடு. நான் என் புத்திக்கு அறிந்து செய்த பாவங்களை, இனி செய்ய மாட்டேன், என்று மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி இப்படி பிரார்த்தனை வைக்கலாம். இந்த வேண்டுதலை வைத்துவிட்டு பிறகு முடிந்தவரை உங்களால் முடிந்த உதவியை அடுத்தவர்களுக்கு செய்து வர வேண்டும். அடுத்தவர்களுக்கு மனதாலும் பாவம் நினைக்கக் கூடாது. இதே போல வாரத்தில் ஒரு நாள் உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடமும் அந்த ஈசனிடமும் வைத்து வரும் போது செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனை கொஞ்சம் குறைக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத 3 தவறுகள்

வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர்வீர்கள். வேண்டுதலை முடித்துவிட்டு கையில் இருக்கும் இலையை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒவ்வொரு வாரமும் இப்படி பரிகாரம் செய்யும் போது உங்களை அறியாமலேயே நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய பாவங்கள் குறைய தொடங்கி விடும். கர்ம வினைகள் குறைய தொடங்கிவிடும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -