செய்த பாவம் தீரவும், இன்பமான வாழ்க்கை கிடைக்கவும் இந்த பரணி தீபத்தை மட்டும் ஏற்றி வழிபட்டால் போதும்

deepam
- Advertisement -

கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றால் அது கார்த்திகை தீபம் ஆகும். இந்த திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஏற்றி பூஜை அறையிலும், வீடு முழுவதும் வைத்து அலங்காரம் செய்வார்கள். அன்றைய தினம் இவ்வாறு விளக்குகள் ஏற்றி பூஜை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரம் அன்று பஞ்சமுக தீபம் ஏற்றுவதன் மூலம் செய்த பாவங்களிலிருந்து விடுபட முடியும். வாருங்கள் இந்த பரணி தீபத்தை ஏற்றி சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

deepam

பரணி நட்சத்திர தினத்தன்று திருவண்ணாமலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நெய் ஊற்றி வட்டவடிவில் தீபம் ஏற்றுவார்கள். இது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு பூஜை முறையாகும். இப்படி அந்த தீபத்தை நமது வீட்டில் ஏற்றி வழிபடுவதன் மூலம் பசி, பிணி, பணப்பிரச்சனை, கடன் தொல்லை, வேலையின்மை, தொழிலில் லாபம் இன்மை, தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் போன்ற அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

- Advertisement -

18 – 11 – 2020 அன்று பரணி நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் மாலை வேளையில் பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை பொருட்களுக்கும், சுவாமி படங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, மலர் சூட்டி அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலமிட வேண்டும்.பழங்கள் அல்லது உலர் பழங்கள் மற்றும் சக்கரை பொங்கல் அல்லது இனிப்பு அவல் இவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக செய்து கொள்ள வேண்டும்.

barani-deepam

பிறகு வாசலில் தீபம் ஏற்றிவிட்டு, பூஜை அறையில் எப்போதும் போல காமாட்சி அம்மன் விளக்கை ஏற்ற வேண்டும். அதன்பிறகு ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். தாம்பூலத் தட்டு இல்லையென்றால் வாழை இலையை விரித்து கொள்ளலாம். பிறகு 5 அகல் விளக்குகளை எடுத்துக் கொண்டு அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை பூஜை அறையின் முன்பு வட்ட வடிவிலோ அல்லது நேராகவோ வைத்துக் கொண்டு சிவபெருமானை வணங்க வேண்டும். சிவபெருமானே போற்றி மந்திரம் அல்லது பாடல்களை பூஜிக்கலாம். அப்படி மந்திரம் எதுவும் தெரியாவிட்டாலும் கண்களை மூடி மனமுருக சிவபெருமானிடம் நான் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னித்து எனது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நல்ல வாழ்வினை கொடுக்க வேண்டும் இறைவா என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

agal-vilakku

இவ்வாறு இந்த பஞ்ச முக தீபத்தை ஏற்றி சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, பாவங்கள் அனைத்தும் கரைந்து இன்பமான வாழ்க்கை கிடைத்திடும். நீங்களும் இந்த பூஜையை செய்து இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி இந்தப் பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

- Advertisement -