பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

amman2
- Advertisement -

இரும்பு பெண்மணி போல பலசாலியாக இருப்பது என்றால், தோற்றத்தில் பாடி பில்டர் ஆவது கிடையாது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களாக இருந்தாலும், மனதளவில் பலசாலியாக இருக்க வேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தாலும், வேலைக்கு செல்லும் இடத்தில் பிரச்சனைகள் இருந்தாலும், அதையெல்லாம் துணிந்து எதிர்த்து போராடி வெல்லக் கூடிய தைரியம் பெண்களுக்கு இருக்க வேண்டும்.

அதாவது சென்டிமீட்டாக கூட பெண்கள் மனதளவில் உடைய கூடாது. இவர்கள் மீது ரொம்பவும் ஆசை வைத்தேன். ரொம்பவும் பாசம் வைத்தேன், ஆனால் இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். என்னுடைய மகன் திருமணத்திற்கு பிறகு என்னை பிரிந்ததால் என்னுடைய மனது ரொம்பவும் பாதிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

என்னால் அதற்குப் பிறகு வாழவே கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது என்றெல்லாம், சொல்ல கூடிய தாய்மார்கள் உள்ளார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கான பதிவு தான் இது. பெண்கள் எந்த சூழ்நிலையிலும் மனதளவில் பலவீனமாகாமல் இருக்க அம்மன் கோவிலுக்கு எந்த பூவை கொடுத்து வழிபாடு செய்யணும். ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

மன பலவீனம் நீங்க பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

பொதுவாகவே பெண்கள் என்றால் பௌர்ணமி தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது அந்த குடும்பத்திற்கும், அந்த பெண்ணிற்கும் சிறப்பான பலனை தரும். அதிலும் உங்கள் கையால் அல்லி மலர்களை வாங்கிக் கொண்டு போய், பௌர்ணமி தினத்தில் அம்மன் கோவில்களுக்கு கொடுத்து வழிபாடு செய்து பாருங்கள்.

- Advertisement -

உங்களுடைய பலவீனமான மனம், பலம் அடையும். ஒருவேளை பௌர்ணமி நாளில் உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வாரம் தோரும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்றும் அல்லி மலர்களை கொண்டு போய் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு, உங்கள் கையாலேயே கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் தைரியசாரிகளாக மாறிவிடுவீர்கள்.

சில வீட்டில் அம்மா தைரியமாக இருப்பாங்க. ஆனா அவர்களுடைய பெண் குழந்தைகள் ரொம்ப ரொம்ப பலவீனமா இருப்பாங்க. அதை நினைத்து கஷ்டப்படும் தாய்மார்கள் உங்கள் பெண் பிள்ளைகளின் கையால் இந்த அல்லி மலர்களை கொண்டு போய் அம்மன் கோவில்களுக்கு கொடுங்க. அந்த பெண் பிள்ளைகளை வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு அழைத்துச் சென்று அம்பாளை வழிபடச் செய்யுங்கள்.

- Advertisement -

நிச்சயமாக அவர்களுடைய மனது பக்குவப்படும். பயந்த சுபாவம் மாறி தைரியம் பிறக்கும். சக்தி என்றாலேஅது பெண்கள்தான். அந்த பராசக்தியின் ஸ்ரூபம் தான் பெண்கள். ஆகவே பெண் பிள்ளையாக இருப்பவர்கள் யாரை கண்டும் எதற்கும் அஞ்சி பயந்து நிற்கக்கூடாது, என்பதை அவர்களிடத்தில் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றவர்களுடைய கடமை.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் தீர்க்கும் துளசி செடி வழிபாடு

அதற்காக பெண்கள் அடங்காப்பிடாரித்தனத்தோடு நடந்து கொள்ள வேண்டுமா என்ற விதண்டாவாத கேள்விகளை எழுப்ப வேண்டாம். பெண்களுக்கு என்ற ஒரு தைரியமும், திமிரும், கர்வமும் அவர்களிடத்தில் இருந்தால் மட்டுமே அவர்கள் இந்த லோகத்தில் எல்லா விஷயங்களையும் எதிர்த்து போராடி வாழ முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -