சனிக்கிழமையில் பெருமாளுக்கு ‘பச்சரிசி விளக்கு’ ஏற்றினால் செல்வம் மேலும் கொழிக்கும்! தொழிலில் அமோக லாபம் உண்டாகும் தெரியுமா?

நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியின்மை, வியாபாரத்தில் மந்தம் என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்தால் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது என்பதே விசேஷமானது தான். பொதுவாகவே தொழில் விருத்தியை ஏற்படுத்தும் பெருமாள் வழிபாடு மிகவும் விசேஷமானது. அதிலும் குறிப்பாக இந்த பச்சரிசி விளக்கு ஏற்றி பெருமாளுக்கு வழிபட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது. அப்படி என்ன விளக்கு நாம் ஏற்ற வேண்டும்? எப்படி ஏற்ற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

perumal

சனிக்கிழமைகளில் அல்லது புரட்டாசி மாதங்களில் இந்த விளக்கை ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெய் போட்டு பச்சரிசி திரியிட்டு ஏற்றப்படும் இந்த விளக்கில் சாட்சாத் மகாலட்சுமியே குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த விளக்கை ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களுடைய துன்பங்கள் யாவும் விலகும்.

ஒரு சிறிய அளவிலான மண் சட்டி அல்லது மண் பானை ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது புதிய மண் அகல் விளக்கு கூட எடுத்துக் கொள்ளலாம். பின்னர் சுத்தமான காட்டன் துணி வெள்ளை நிறத்தில் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை நெய்யில் நன்கு தோய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு துணியை மண் சட்டிக்குள் விரித்து வைத்து அதில் முழுக்க சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். மற்றொரு துணியில் பச்சரிசியை வைத்து திரியாக திரித்து கொள்ள வேண்டும். இந்த பச்சரிசி திரியை நன்கு நெய்யில் தோய்த்து மண் சட்டிக்குள் திரியாக போட வேண்டும்.

pacharisi

பெருமாளுக்கு பச்சரிசியை கொண்டு இப்படி நெய் விளக்கு ஏற்ற பதினாறு செல்வங்களும் உண்டாகும் என்பது ஆன்மீக ரகசிய பரிகாரம் ஆகும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கை தவிர வேறு எந்த ஒரு விளக்கையும் பயன்படுத்தக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே போல நெய் தவிர வேறு எந்தவொரு எண்ணெய்யையும் ஊற்றக் கூடாது.

- Advertisement -

சனிக்கிழமைகளில் வடக்கு திசையை நோக்கி பெருமாள் படத்தை பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் மண் சட்டியில் இந்த விளக்கை ஏற்றி தூப, தீப, கர்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கலில் நெய் அதிகமாக ஊற்றி நிவேதனம் வைக்கலாம். பின்னர் காணிக்கையாக ரூபாய் நோட்டுகளை படத்திற்கு முன்னால் வைக்க வேண்டும்.

Thulasi

பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்க வேண்டும். மந்திரங்களை படிக்க தெரியாதவர்கள் அதனை ஒலி வடிவமாக ஒலிக்கவிட்டு பூஜைகள் மேற்கொள்ளலாம். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வரும் பொழுது உங்கள் தொழிலில் அமோகமான வளர்ச்சியை நீங்கள் காணலாம். மேலும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை நீங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

agal vilakku

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்கிற முடிவுகளில் சாதகமான பலன்களைக் காண இந்த வழிபாட்டை தொடங்கலாம். மேலும் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வம் பெருக இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம். மண் சட்டியில் நெய் ஊற்றி பச்சரிசியில் திரியிட்டு ஏற்றப்படும் பெருமாள் தீபம் அதிக விசேஷ சக்திகளை கொண்டுள்ளது. இதனை தீட்டு படாத நாட்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் செய்வது உத்தமம்.