விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.

pillaiyar1
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு பயம் இருக்கும். ஆனால் இப்போது அந்த சூழ்நிலை மாறி சுதந்திரம் என்ற பெயரில் பிள்ளைகள் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலை நிலவி விட்டது.

உங்களுடைய பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க மாட்டேங்கிறாங்களா. படிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டேங்குறாங்களா. புத்தி கூர்மை குறைவாக இருக்குதா. புதன்கிழமையிலிருந்து இந்த விளக்கை ஏற்ற தொடங்குங்கள். அடுத்த 16 நாட்களுக்குள் உங்கள் குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றத்தை காணலாம். குழந்தைகளின் நல்வழிப்படுத்தும் விளக்கை எப்படி ஏற்றுவது. ஆன்மீகம் சார்ந்த வழிபாடு இதோ உங்களுக்காக.

- Advertisement -

குழந்தைகளின் நல்வழிப்படுத்தும் விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். முதலில் சின்ன அளவில் விநாயகர் சிலை. கல், மண், வெள்ளி, எந்த சிலையாக இருந்தாலும் சரி சின்ன விநாயகர் சிலையை பூஜை அறையில் இருக்க வேண்டும். இரண்டு சின்ன மண் அகல் விளக்குகள் தேவை. கற்றாழைக்கு உள்ளே இருக்கும் ஜெல் கட்டாயம் தேவை.

ஐந்து ரூபாய் நாணயம், பச்சை நிற திரி, தேவையான பொருட்கள் இவ்வளவுதான். மறற்படி பூஜை என்றால் என்ன செய்வீர்கள் பூஜையறையை சுத்தம் செய்து, பூ போட்டு, விளக்கு ஏற்றி ஊதுவத்தை காண்பிக்கவும். அதையெல்லாம் பார்த்துக்கோங்க. மண் அகல் விளக்கை தண்ணீரில் போட்டு நனைத்து நன்றாக காய வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் உள்ளே கற்றாழை ஜெல் ஒவ்வொரு ஸ்பூன் போட்டு, தேங்காய் எண்ணெய் ஊற்றி, 5 ரூபாய் நாணயத்தை அதில் வைத்து பச்சை நிற திரியை போட்டு இரண்டு விளையும் பெற்றவர்கள் கையால் ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு விளக்கை விநாயகரது சிலைக்கு பின்பக்கம் வைக்க வேண்டும். அதுதாங்க சூட்சமமே. விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால், உங்கள் சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடக்க தொடங்கி விடுவார்கள்.

அவர்கள் சரியாக படிக்கவில்லை எனும் பட்சத்தில் அவர்களுடைய படிப்பு சிறந்து விளங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அவர்களுடைய கல்வி மேலோங்கும். வீட்டில் இருந்தபடியே, வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு உங்கள் கையால் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கற்றாழை ஜெல்லை டப்பாவில் விற்கும் ஜெல்லையெல்லாம் வாங்கி பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

கற்றாழையை வெட்டி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து பயன்படுத்த வேண்டும். தினமும் இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ள வேண்டும். தினமும் அகல் விளக்கை உள்ளே சுத்தம் செய்து விடுங்கள். புதுசாக கற்றாழை ஜெல் போட்டு, புதுசாக தேங்காய் எண்ணெய் ஊற்றி, புதுசாக திரி போட்டு, அதே ஐந்து ரூபாய் நாணயத்தை மீண்டும் பயன்படுத்தி, பதினாறு நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால், பிள்ளைகள் நடவடிக்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தங்கம் தங்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டியது

ஒற்றுமை இல்லாத பெற்றவர்கள், பிள்ளைகளுக்குள் நல்ல ஒரு ஒற்றுமை ஏற்படும். 16 நாள் முடிந்ததும் அந்த ஐந்து ரூபாயை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அவ்வளவுதான் இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற இந்த தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -