பெற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது எதையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறதா? பித்ரு கடன்கள் அகல செய்ய வேண்டிய தானம் இதுதான்!

pithru-cow-sad
- Advertisement -

நம்முடன் இருக்கும் பொழுது யாருடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை! அதே போல தாய், தந்தையர் நம்முடன் இருந்து நமக்கு எல்லா விஷயங்களையும் செய்து, சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய அருமையை புரிந்து கொள்ளாத நாம், அவர்கள் இல்லாத பொழுது ஏனோ நிறையவே வருத்தப்பட்டு கொண்டிருப்போம். இருக்கும் பொழுது செய்ய வேண்டிய கடமைகளை செய்வது தான் அனைவருக்கும் நல்லது.

இப்படி உங்களால் செய்ய முடியாத நேரத்தில் உங்களுடன் இருந்த உங்களுடைய பெற்றோர்கள், செய்ய முடியும் பொழுது உங்களுடன் இல்லாமல் போய்விட்டார்களா? இதனால் கவலையுடன் இருக்கிறீர்களா? இந்த ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுது இந்த வருத்தத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்கிறது ஆன்மீகம். அப்படியான ஒரு ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

- Advertisement -

பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். பெற்றோர்கள் மட்டும் அல்ல, அவர்களுடைய பெற்றோர்கள், ரத்த வழி உறவினர்கள் அனைவருமே முன்னோர்கள் தான். இவர்களுக்கு உரிய கடமைகளை நாம் இறந்த பின்பு செய்யாவிட்டால், பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு பித்ரு கடன் உண்டாகிறது. கடன்கள் அகல, பசுவை தானம் செய்ய வேண்டும் அல்லது பசுக்களுக்கு தேவையான விஷயங்களை தானம் செய்ய வேண்டும் என்பது நியதி!

அமாவாசை, திதி தர்ப்பணம் செய்யும் பொழுது, மஹாலயம் போன்ற நாட்களில் எல்லாம் பசுக்களுக்கு அகத்திக்கீரை போன்றவற்றை தானம் செய்வதை பார்த்திருப்போம். பசுக்களுக்கு செய்யும் தானம் ஆனது, பித்ரு கடன்களை போக்கும் என்பது ஐதீகம். அது போல நீண்ட நாட்கள் பெற்றவர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்கிற வருத்தத்துடன் இருப்பவர்கள் பசுவை தானம் செய்ய வேண்டும். பால் கொடுக்கும் பசுவை கன்றுடன் சேர்த்து வாங்கி கொடுக்க முடிந்தால் நீங்கள் கோவிலுக்கு இவைகளை தானம் செய்யலாம். கோவிலுக்கு பசுக்களை தானம் செய்ய முடியாதவர்கள், பசு வளர்ப்பவர்கள் அல்லது பால் கறந்து கொடுப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த தானத்தை கொடுக்கலாம்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் பித்ரு கடன் முழுமையாக ஆகலும், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். பித்ரு தோஷம், பித்ரு கடன் இருப்பவர்களுக்கு வாழ்வில் தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இவர்கள் என்னதான் முதலீடு, முயற்சி போன்றவற்றை செய்தாலும் தொடர் சறுக்கல்கள் ஏற்படும். இப்படி வாழ்க்கையில் தொடர்ந்து சறுக்கி கொண்டே இருப்பவர்கள், கவலையுடன் இருப்பவர்கள், பெற்றோர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்கிற ஏக்கம் கொண்டிருப்பவர்கள், அமாவாசை தோறும் திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் ஆகியோர் பசுக்களுக்கு இது போல அகத்திக்கீரை தானம் செய்வது, பச்சரிசி தானம் செய்வது, வாழைப்பழம் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
மணக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் மாரியம்மன். அம்பாள் கோவிலுக்கு சென்று இதை மட்டும் செய்தால், உங்கள் மனசு உடனே லேசாகும்.

இதன் அடுத்தபடியாக பசுவை வாங்கி தானம் செய்வதாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடிந்தால் பசுவை விலை கொடுத்து வாங்கி, அதை தானமாக கோவிலுக்கு அல்லது மாடுகள் வளர்ப்பவர்களிடம் தானமாக கொடுத்துவிட்டு வாருங்கள். இவ்வளவு காசு செலவு செய்ய முடியாது என்பவர்கள், வேறொரு பரிகாரத்தை செய்யலாம். பசுக்கள் வளர்ப்பவர்களுக்கு மாதாமாதம் பசுக்களுக்கு உரிய தீவனத்தை தானமாக வாங்கி கொடுக்கலாம். இது போல பசுக்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும், பித்ரு கடன்களை அகற்றும். பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை பசுக்களுக்கு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்கிறது ஆன்மீகம். இருக்கும் பொழுதே பெத்தவங்களுக்கு செய்ய முடியாதவங்க, இல்லாத பொழுது இந்த தானத்தையாவது செய்து பயனடையலாமே!

- Advertisement -