அடடா கடலை மாவை வைத்து இப்படி ஒரு குருமா கூட வைக்கலாமா? வித்தியாசமான சுவையில் இந்த வெள்ளை குருமாவை யாரும் மிஸ் பண்ணாதீங்க. இட்லி தோசை சப்பாத்திக்கு வேற லெவல் சைட் டிஷ்.

pottukadalai-kuruma1
- Advertisement -

இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுலபமாக வித்தியாசமான ஒரு குருமா ரெசிபியை தான் இன்று பார்க்கப் போகின்றோம். கடலை மாவு சேர்த்து இன்ஸ்டன்ட் சாம்பார் தானே செய்வோம். இப்படி ஒரு முறை குருமா வைத்து பாருங்கள். இது வேற லெவல் டேஸ்ட் இருக்கும். இதில் மிளகாய் தூள் சேர்க்கப் போவது கிடையாது. பச்சை மிளகாய் காரத்தோட செய்ய போற இந்த குருமா ஒரு தனி சுவையை கொடுக்கும்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பட்டை – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு, தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 5, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இதனோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வந்தவுடன் மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சேர்த்து குருமாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

தக்காளி நன்றாக வெந்து வரட்டும். இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து 1/4 கப் தேங்காய் துருவல், கருவேப்பிலை 1 கொத்து, கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைத்து விட்டு அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தக்காளி பழம் நன்றாக வெந்து வந்ததும் அரைத்து இருக்கும் விழுதை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். 10 லிருந்து 15 நிமிடம் இது நன்றாக கொதிக்க வேண்டும். இது கொதிக்க கொதிக்கத் திக்காகும்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க தக்காளி ரசம் இப்படியும் வைக்கலாம். இந்த ரசம் வாசத்திற்கு பக்கத்து வீட்டில் இருந்தே சாப்பிட ஆட்கள் வருவார்கள் என்றால் பாருங்க.

தேவையான அளவு தண்ணீரை முதலிலேயே ஊற்றி விடுங்கள். இறுதியாக நன்றாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட இட்லி மேலே ஊற்றி சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -