இந்த மசாலாவை அரைத்து போட்டு கோவக்காய் வறுவல் செஞ்சி பாருங்களேன்! கோவக்காயை இதுவரை தொடாதவர்கள் கூட அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க.

kovakkai-fry2
- Advertisement -

கோவக்காய், இதுவும் சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி தான். ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். சுவையாக கோவக்காய் வறுவல் எப்படி சமைப்பது ஒரு ஸ்பெஷல் மசாலா அரவையுடன் ஒரு ஸ்பெஷல் ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதை கோவைக்காய் பூண்டு கறி என்று சொல்லுவார்கள். இதில் பூண்டு வாசம் மணக்க மணக்க சூப்பராக இருக்கும். 1/2 கிலோ அளவு கோவக்காய் எடுத்து சுத்தமாக கழுவி விட்டு, தண்ணீரை வடிகட்டி நீலவாக்கில் நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மெல்லிசாகவே நறுக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/4 ஸ்பூன், தட்டிய பூண்டு பல் – 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கி பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் கோவை காய்களை இதில் போட்டு உப்பு – தேவையான அளவு தூவி, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் தூவி எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் ஊற்றி கோவக்காயை வேக வைக்க கூடாது எண்ணெயில் தான் கோவக்காய் வதங்கி வேக வேண்டும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

இதற்குள் தனியாக வேறொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், வர மல்லி – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் முக்கால் பாகம் வறுத்து சீரகம் – 3/4 ஸ்பூன், வர மிளகாய் – 2, தோலுடன் பெரிய பூண்டு பல் – 4 போட்டு, மீண்டும் எல்லா பொருட்களையும் வறுத்து இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளவும். இதுதான் நாம் அரைத்திருக்கும் ஸ்பெஷல் பொடி.

இப்போது கடாயில் கோவக்காய் வெந்து கொண்டிருக்கிறது அல்லவா. பதினைந்து நிமிடத்தில் அது முக்கால் பாகம் வெந்து வந்ததும் நாம் அறைத்து வைத்திருக்கும் பொடியை கோவக்காயோடு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு வைத்தால் சூப்பரான கோவைக்காய் வறுவல் தயார். இதன் ருசியும் மனமும் அத்தனை சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சின்ன சின்ன மெர்ஸில் கிடைக்கும் சுவையான கார சட்னியை நம்முடைய வீட்டிலும் செய்யலாம். அதுவும் இந்த சட்னிக்கு தக்காளியே தேவை இல்லை.

சாதம் தயிர் சாதம், வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் 1/2 கிலோ அளவுக்கு குறைவாக கோவைக்காய் பொரியல் செய்தால் இந்த மசாலா பவுடர் சேர்ப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். மீதம் பொடி இருந்தால் மற்ற பொரியல் கூட போடலாம் தவறு கிடையாது. இந்த ஆரோக்கியம் தரும் அழகான ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -