பூண்டு சட்னி செய்முறை

poondu chutney
- Advertisement -

வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, தயிர் சாதம், எலுமிச்சம்பழ சாதம் இப்படி வெரைட்டி ரைஸ் இருக்கும் அதே சமயம் டிபன் ஐட்டத்திற்கும் இதோட சேர்த்து ஸ்நாக்ஸ் ஐட்டத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு சட்னி இருந்தால் போதும். இந்த சட்னியை ஒரு முறை செய்து விட்டாலே நான்கு நாள் ஆனாலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கும். வெளியில வச்சாலே நாலு நாள் யூஸ் பண்ணலாம். பிரிட்ஜில் வைத்து எவ்வளவு நாள் யூஸ் பண்ணலாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இத நீங்க செய்யும்போதே உங்க நாக்குல எச்சில் ஊர ஆரம்பிச்சுரும். அந்த அளவுக்கு இதோட மனம் அவ்வளவு சூப்பரா இருக்கும். மனத்துக்கு ஏத்த மாதிரியே சுவையும் அட்டகாசமா இருக்கும். உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் பொருளாக தான் இதுல இருக்குற பொருள் எல்லாமே இருக்கு. அதும் வெறும் நாலே நாலு பொருட்கள வெச்சி அருமையா சட்னி செய்ய முடியும் உங்களால நம்ப முடியுதா? இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பூண்டு கார சட்னி எப்படி செய்வது அப்படின்னு தான் பாக்க போறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காய்ந்த மிளகாய் – 15
  • முழு பூண்டு – 2
  • தக்காளி – 3
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
  • கடுகு உளுந்து – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நிறம் நன்றாக மாறிய பிறகு இதனுடன் பூண்டை சேர்க்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இவை அனைத்தையும் செய்ய வேண்டும். பூண்டு நன்றாக வதங்கி நிறம் மாற வேண்டும். நிறம் மாறிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளியின் தோல் சுருங்கியதும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தக்காளி குழையும் வரை நன்றாக வேக விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைத்து விடுங்கள். ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மூடில் மூன்று முறை அரைத்து விட்டு பிறகு ஒரு முறை மட்டும் லேசாக அரைத்து எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த சட்னியை நைசாக அரைக்க கூடாது. சிறிது குற குறப்பாக தான் அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாயில் மீதம் இருக்கும் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து சேர்த்து கடுகு வெடித்ததும் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும்.

கருவேப்பிலை பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக குறைந்த தீயில் கிண்ட வேண்டும். சட்னி எண்ணெய் அனைத்தையும் உறிஞ்சியதும் அடுப்பை அணைத்துவிட்டு சாதாரண பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் பூண்டு கார சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே:தேங்காய் பூரி செய்முறை

மிகவும் எளிமையாக அதே நேரத்தில் சுவையும் பிரமாதமாக இருக்கும் இந்த பூண்டு சட்னியை ஒரு முறை வீட்டில் செய்து பார்த்து ருசிக்கலாம்.

- Advertisement -