பூண்டு சட்னி பிடிக்காது என்பவர்கள் கூட இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள், சுவையான பூண்டு கார சட்னி எளிதாக எப்படி செய்யலாம்?

poondu-chutney
- Advertisement -

பூண்டு சட்னி என்றாலே ஒதுக்கி வைப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு முறை நீங்கள் பூண்டு சட்னி கொடுத்து பாருங்க, அவர்களே வேண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவாங்க! ருசியான பூண்டு சட்னி ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்திலேயே தயாரித்து விடலாம். இந்த பூண்டு சட்னி வித்தியாசமான முறையில் எளிதாகவும் வீட்டிலேயே ருசியாகவும் எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

பூண்டு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, காஷ்மீரி சில்லி – 3, தக்காளி – 3, பூண்டு – 100 கிராம், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

பூண்டு கார சட்னி செய்முறை விளக்கம்:
பூண்டு கார சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு 100 கிராம் பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வாணலியில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ரெண்டு டேபிள் ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். இந்த கார சட்னிக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் பொழுது ரொம்ப ருசியாக இருக்கும்.

எண்ணெய் காய்ந்ததும் முதலில் அதில் பத்து வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிளகாய்கள் நிறம் மாறி விடக்கூடாது எனவே கவனமாக மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நிறம் கொடுக்க மூன்று காஷ்மீரி மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் பரவாயில்லை விட்டு விடலாம், இது ஆப்ஷனல் தான். மிளகாய்கள் வறுபட்டதும் இதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே எண்ணெயில் மூன்று தக்காளி பழங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதன் அடிப்பகுதியில் கத்தியால் லேசாக ஆங்காங்கே கோடுகள் கிழித்து கொள்ளுங்கள். முழு பழங்களை அப்படியே போட்டு முக்கால் பாகம் நன்கு சுருண்டு வர வதக்கி கொள்ளுங்கள். தக்காளி பழங்களில் இருக்கும் சாறு அப்பொழுது தான் நமக்கு அதே சுவையில் அப்படியே கிடைக்கும். பின்னர் அதே வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு சுருள நிறம் மாற வதக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
செட்டிநாடு ஃபேமஸ் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் உங்களுடைய ஃபேவரிட் ரெசிபி இதுவா தான் இருக்கும்

சுருண்டு நிறம் மாறியதும் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் தக்காளி பழங்களையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிய விட்டு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்து சட்னியில் கொட்டுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே ருசியான இந்த பூண்டு கார சட்னி ரெசிபி அற்புதமாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -