இரண்டெழுத்து மந்திரம் சமைக்காமலேயே சோறு போடுமா? நல்ல கதையா இருக்கே!

ramar-food
- Advertisement -

சிலர் இறைவனே கதி என்று அமர்ந்து கொண்டு இருப்பார்கள். எந்த வேலையும் செய்யாமல் கடவுள் காப்பாற்றுவார் என்று அவரின் திருவடியை பணிந்து மனம் முழுவதுமாக ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருக்கும் இவர்களை பார்த்து, சிலர் நீ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தால் உனக்கு சோறு கிடைத்து விடுமா? உழைத்தால் தானே சோறு கிடைக்கும்? என்று கேட்பார்கள். சமைக்காமலேயே மந்திரம் சோறு போடுமா? இந்தக் கேள்விக்கு விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த ஆன்மீக குறிப்பு பதிவை நோக்கி பயணிப்போம் வாங்க.

உழைக்காமல் எந்த ஒரு விஷயமும் நமக்கு கிடைக்காது. அது சாப்பாடாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருந்தாலும் சரி. உழைத்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும், நமக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொள்ளவும் முடியும். அதற்காக கடவுளை நாம் மறந்து விடவும் கூடாது. கடவுளின் மந்திரங்கள், நாமங்கள் ஜெபிப்பதால் உண்டாகிய பலனை ஒரு சிறு கதை மூலம் கேட்போம் வாங்க.

- Advertisement -

ஒருமுறை மாமன்னர் அக்பர் வேட்டைக்காக காட்டுக்கு சென்றார். மிகப்பெரிய காட்டில் வேட்டைக்கு அக்பருடன் அவருடைய மந்திரியாகிய பீர்பாலும் உடன் சென்றார். காடு பறந்து விரிந்துள்ளதால் திடீரென அவர்களுக்கு வழி மறந்து போய்விட்டது. காட்டை விட்டு வெளியில் எப்படி செல்ல வேண்டும்? என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நேரம் கடக்க கடக்க பசியால் அவர்கள் வாடவும் ஆரம்பித்தார்கள். அடர்ந்த வனத்தில் சாப்பிட எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஒரு மரத்தின் கீழ் ஓய்வு பெற அமர்ந்து கொண்டனர். மந்திரியாகிய பீர்பால் வனத்தின் அழகில் சொக்கி போய் மெய் மறந்து போய்விட்டார். ‘ராம’ என்னும் இரண்டு எழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க துவங்கி விட்டார். இறைவனுடைய ராம நாமத்தில் மூழ்கி போன இவரை அக்பரால் எழுப்ப முடியவில்லை. பசி தாங்க முடியாமல் உணவு சேகரித்து வர கூறினார் ஆனால் பீர்பாலோ அதையும் பொருட்படுத்தாமல் மன்னரே வயிறு என்னவோ பசிக்கிறது ஆனால் மனம் என்னவோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது என்று கூறினார். கோபமடைந்த அக்பர் தானே சென்று உணவை தேட புறப்பட்டார்.

- Advertisement -

சிறிது தூரம் நடந்து சென்றதும் ஒரு அழகிய வீடு தென்பட்டது. அந்த வீட்டிற்குள் சென்று உணவு கேட்டார். சக்கரவர்த்தியே வீடு தேடி வந்து உணவு கேட்டால் யார் தான் சாப்பாடு போட மாட்டார்கள்? அறுசுவை உணவை தயார் செய்து மகிழ்ச்சியுடன் அக்பரை நன்கு கவனித்து கொண்டிருந்தனர். கடும் பசியிலிருந்து அக்பர் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, சரி போனால் போகட்டும் என்று பீர்பாலுக்கும் தேவையான உணவை கேட்டு பெற்று வந்தார்.

மரத்தடி திரும்பிய பொழுதும் அவர் ராம நாமத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டு மெய்மறந்து போயிருந்தார். அவரிடம் சாப்பாட்டை கொடுத்து சாப்பிடு என்று கூறிவிட்டு ஏளனமாக சிரித்தார். ‘ராம’ நாமம் உங்களுக்கு சோறு போட்டதா என்ன? நான் மட்டும் இப்பொழுது சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் உனக்கு சோறு கிடைத்து இருக்குமா? என்று கேட்டார்.

இதையும் படிக்கலாமே:
நாளை 26/1/2023 வாய்ந்த வசந்த பஞ்சமி! இழந்த சொத்துக்கள் கிடைக்கவும், புது வீடு கட்டி குடியேறவும், ஞானம் பெறவும் பஞ்சமியில் இந்த கடவுளை இப்படி வழிபடலாமே!

அதற்கு பீர்பால் அமைதியாக கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அரசரே! சாப்பாட்டிற்காக ஒரு மாமன்னர் சாதாரண மக்களிடம் போய் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என்னுடைய ராமனோ மாமன்னராகிய தங்களின் கையாலேயே எனக்கு உணவு கொண்டு வந்து கொடுக்க வைத்தார் பார்த்தீர்களா? இதுதான் என்னுடைய ராம நாம மகிமை என்று கூறினார். உடனே அக்பரால் எதுவும் பேச முடியவில்லை அமைதியாக நின்று விட்டார். நாம் நம் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால், நம்மால் இயலாத நேரத்தில் இறைவன் எப்பொழுதும் கைவிடுவதில்லை. இறைவனுடைய நாமம் நம்மை எப்பொழுதும் பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

- Advertisement -