உங்கள் வீட்டில் அரிசி பானை இப்படி இருந்தால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது! பணப்புழக்கம் சரளமாக இருக்க, வறுமை நீங்க அரிசியில் இதை போட்டு வையுங்கள்.

rice-arisi-alavai

அரிசி என்பது அன்னபூரணிக்கு இணையானது ஆகும். அரிசியை அன்னபூரணியாக நினைத்துப் போற்றி வழிபடுதல் வறுமையை ஒழிக்கும். முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்பொழுது அதிகபட்சம் 25 கிலோ மூட்டை வாங்குகிறார்கள் அவ்வளவுதான். வெள்ளம், பஞ்சம், மழை என்று வரும் பொழுது வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே அரிசி, தானியங்கள் எல்லாம் சேகரித்து வைக்க தனியாக வீட்டில் சேமிப்பு கலனுக்கு என்று ஒரு அறையை பரண் போல் அமைத்து வைத்திருப்பார்கள்.

arisi

எவ்வளவு வருடங்கள் ஆனாலும் வீடு முழுவதும், வெள்ளம் சூழ்ந்தாலும், தானியத்திற்கு குறைவிருக்காது. விவசாயம் செய்யும் தானிய விதைகளும் கூட இப்படி சேமிப்பது உண்டு. பசியின்றி, பஞ்சமின்றி, வறுமையின்றி இருப்பது எப்படி? என்பது நம் முன்னோர்கள் இடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கூறிய சில அரிசி பற்றிய குறிப்புகள் தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நீங்கள் வாங்கும் அரிசி மூட்டையை அப்படியே மூட்டையாக வைக்காமல் அதற்கென தனியே ஒரு எவர்சில்வர் பாத்திரம் அல்லது வேறு எந்த உலோக பாத்திரத்திலும் வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் வாலி, டப்பாவில் கூட வைக்கலாம் தவறில்லை. மூட்டையாக அப்படியே வைத்தால் அதில் எறும்புகளும், வண்டுகளும் வர வாய்ப்புகள் உண்டு. மேலும் அதில், தூசு தும்புகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு எனவே இப்படி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

arisi-alavai1

அரிசி பானைக்குள் கட்டாயம் ஆழாக்கு, படி என்று சொல்லக்கூடிய அரிசி அளக்கும் அளவை நிச்சயமாக இருக்க வேண்டும். இது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. வறுமை இன்றி செல்வ செழிப்பு உண்டாக அன்னபூரணியை முதலில் மதித்து நடத்தல் வேண்டும். சாதத்தை எப்படி வீணாக்கினால் தோஷம் வந்து சேருமோ அதே போல் அரிசியையும் வீணாக்குவது அன்ன தோஷத்தை உண்டாக்கும்.

ஒருவருக்கு அன்ன தோஷம் ஏற்பட்டால் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் அந்த தோஷம் வறுமையை உண்டாக்கும். எனவே கூடுமானவரை அரிசியை வீணாக்காதீர்கள். மேலும் அரிசி பானைக்குள் பூச்சிகள், வண்டுகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைப்பது உண்டு. அம்பாளை வணங்கும் விதமாக இப்படி செய்யப்பட்டு வந்துள்ளது. எனவே அன்னபூரணி தாயை போற்றும் விதமாக ஒன்றிரண்டு காய்ந்த வேப்பிலைகளை போட்டு வையுங்கள். இப்படி வேப்பிலைகளை போட்டு வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு.

varisi-alavai

அரிசி அளக்கும் அளவையை விசேஷ, விழாக்களின் பொழுது நம் பூஜையில் வைத்து வழிபடுவது உண்டு. அதே போல வெள்ளிக்கிழமை தோறும் ஆழாக்கில் அரிசியை அளந்து தலை தட்டாமல் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அந்த அரிசியை மறுநாள் சாதம் வடித்த பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் மனம் குளிர்ந்து வறுமையை நீக்கி, செல்வச் செழிப்பை அதிகரிக்கச் செய்வாள்.அரிசியை கைகளால் தொட்டு அளந்து போடக் கூடாது. அரிசி அளக்கும் அளவையில் சரியாக அளந்து போடுவது குடும்பத்திற்கு நல்லது. மேலும் வறுமை என்று உங்களிடம் யாராவது கேட்டால் உங்களால் பணமாக கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு படி அரிசியை அளந்து கொடுங்கள் புண்ணியம் பன்மடங்கு பெருகும்.