உங்களுடைய சமையலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவையை கொடுக்க, இந்த 10 சமையல் குறிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

kitchen1
- Advertisement -

நம்முடைய சமையலை இன்னும் கொஞ்சம் கூடுதல் ருசியாக சமைத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறினால் அவர்களுடைய மனது சந்தோஷப்படும். வயிறும் திருப்தி அடையும். பின்பு வீட்டில் பெண்களின் கை மேலோங்கி இருக்கும். உங்களுடைய வீட்டில் உங்களுடைய சமையல் இன்னும் இன்னும் ருசிப்பதற்கு தேவையான ஒரு சில சின்ன சின்ன குறிப்புகள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

புழுங்கல் அரிசியை கடாயில் போட்டு பொரி அரிசி போல வறுத்து எடுத்து, நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு கூட்டுக்கறி செய்யும் போது இறுதியாக தூங்கிவிட்டால் சமையல் சுவையாக இருக்கும்.

- Advertisement -

வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள்.

முள்ளங்கியை சமைக்கும் போது அதை லேசாக எண்ணெயில் வறுத்து சமைத்தால் சளி பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

காலிஃபிளவரை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கும் போது இறுதியாக அந்த எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலையையும், பொடியாக நறுக்கிய சிறிது சின்ன வெங்காயத்தையும் போட்டு பொரித்து எடுத்தால் காலிபிளவர் சில்லி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

சர்க்கரை பொங்கலை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு, 1/2 கப் அளவு தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலந்து அதன் பின்பு சர்க்கரை பொங்கல் செய்து பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும்.

- Advertisement -

வாழைப்பழத்தை ஸ்டோர் செய்து வைக்கும்போது தனியாகத்தான் வைக்க வேண்டும். மற்ற பழங்களோடு வாழைப்பழத்தை சேர்த்து வைத்தால் வாழைப்பழத்துடன் இருக்கக்கூடிய மற்ற பழங்களும் சீக்கிரமாக பழுத்துவிடும்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெயில் பலகாரங்களை பொரிக்கும்போது எண்ணெய் பொங்கி வரும் அல்லவா. அப்போது சூடாக இருக்கக் கூடிய அந்த எண்ணெயில் கொய்யா இலையை போட்டு எடுத்துவிட்டு அதன் பின்பு பலகாரங்களை பொரித்து எடுத்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

சில சமயம் சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய் விடும். குழைந்த சேமியா பாயாசத்தில், 1/4 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு ஊற்றி வைத்தால் பாயாசம் சூப்பராக மாறிவிடும். ஒட்டி பிடித்திருக்கும் சேமியா தனித்தனியாக பிரிந்து வந்துவிடும்.

வெளியூர் செல்லும்போது சப்பாத்தியை பேக் செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதை சில்வர் பேப்பரில் வைத்து சுருட்டி பேக் செய்து எடுத்துச் செல்லுங்கள். நீண்ட நேரம் சூடாகவும் இருக்கும். அதே சமயம் மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காயை சமைப்பதாக இருந்தால் அதில் கொஞ்சம் சீரகம், கொஞ்சம் பூண்டு சேர்த்து சமைக்கும் போது வாயு தொல்லை இருக்காது.

நிறைய தலைவலி தலைவலி இருக்கும்போது குப்பைமேனி சாறு எடுத்து தலையில் பூசிக் கொண்டால் தலைவலி குறையும். கண்களில் நீர் கோர்த்து இருப்பது போல தலை பாரம் இருந்தால் சுக்கை நன்றாக தண்ணீர் ஊற்றி இழைத்து, அதில் பெருங்காயதூள் சேர்த்து நெற்றியில் புருவத்துக்கு கீழ்ப்பகுதியில், பத்து போட்டுக்கொள்ள வேண்டும். பத்தே நிமிடத்தில் தலைபாரம் குறையும்.

- Advertisement -