அன்றாட சமையலுக்கு இல்லத்தரசிகளுக்கு தேவைப்படக்கூடிய அசத்தலான 12 எளிய சமையல் குறிப்புகள் இதோ!

vathal-kulambu-sambar
- Advertisement -

அசத்தலான இந்த சமையல் குறிப்புகள் இல்லத்தரசிகளுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கப் போகிறது. சின்ன சின்ன பொருட்களை சமையலறையில் பாதுகாப்பாக வைப்பது முதல், சுவை கூட்டும் சமையல் ரகசியங்கள் வரை நிறையவே நமக்கு கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வகையில் இல்லத்தரசிகளுக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான 12 குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
மெதுவடை தயாரிக்கும் பொழுது உளுந்துடன் சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து நன்கு கெட்டியாக ஆட்டி வடை தயாரித்து பார்த்தால் வடை மிருதுவாக சுட வரும்.

- Advertisement -

குறிப்பு 2:
பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்க மாவை பிசையும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்தால் நீண்ட நேரம் உப்பலாக அப்படியே மொறு மொறுன்னு இருக்கும்.

குறிப்பு 3:
வாழைத்தண்டு, வாழை மரம் வீட்டில் இருந்தால் வாழை பட்டையை எடுத்து வையுங்கள். இந்த பட்டையில் கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா போன்ற இலைகளை சுருட்டி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
முருங்கை இலைகளை ஆய்வதற்கு சிரமப்படுபவர்கள் அதை வாங்கி வந்த உடன் ஒரு பெரிய அளவிலான நியூஸ் பேப்பரில் சுருட்டி வையுங்கள். காலையில் பார்த்தால் முக்கால்வாசி இலை தானாகவே பேப்பரில் உதிர்ந்திருக்கும்.

குறிப்பு 5:
தேங்காயை உடைத்தவுடன் தேங்காய் மூடியை ஒரு பாத்திரத்தில் கவிழ்த்தி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் பிரஸ் ஆக இருக்கும். இல்லையேல் நீங்கள் மூடியை தண்ணீரில் வைக்கலாம் அல்லது மூடியின் மீது சிறிதளவு உப்பை தேய்த்து வைத்தாலும் கெட்டுப் போகாது.

- Advertisement -

குறிப்பு 6:
பூண்டு வாங்கி வந்த உடன் அதை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். உதிர்த்த பின்பு சிறிதளவு கேழ்வரகு போட்டு வைத்தால் சீக்கிரம் புழு பிடிக்காமல், நமத்து போகாமல் இருக்கும்.

குறிப்பு 7:
வெங்காயத்தை நறுக்கியவுடன் பயன்படுத்த வேண்டும் இல்லையேல் காற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் அதில் போய் உட்கார்ந்து கொள்ளும். அப்படி நறுக்கியவுடன் பயன்படுத்த முடியாதவர்கள் சிறிதளவு வெண்ணையை தடவலாம், வாடாமல் அப்படியே இருக்கும்.

குறிப்பு 8:
சாம்பார் வைக்க துவரம் பருப்புடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து வேக வைக்கவும் இதனால் சாம்பார் காலையில் வைத்தாலும் இரவு வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு 9:
வத்த குழம்பு மற்றும் அசைவ குழம்பு வகைகள் வைக்கும் பொழுது கடைசியாக சிறிதளவு மிளகுத்தூளை சேர்த்து கலந்து விட்டு இறக்கிப் பாருங்கள் அதன் மணம் மற்றும் சுவை ஆளை தூக்கும்.

குறிப்பு 10:
வெண்டைக்காய் வதக்கும் பொழுது சிறிதளவு சர்க்கரை சேர்த்து வதக்கினால் அதன் பிசுபிசுப்பு தன்மை சீக்கிரம் போகும் மேலும் சிறிதளவு புளிப்பான மோரை சேர்த்தால் மொறுமொறுன்னு கிரிஸ்ப்பியாக வதங்கும்.

இதையும் படிக்கலாமே:
வெறும் மூணே விசில் தான் பருப்பு, பால், எதுவும் சேர்க்காமல் குக்கரில் சர்க்கரை பொங்கல் சட்டுனு ரெடி பண்ணிடலாம். அட இப்படியும் கூட ஈஸியா பொங்கல் வைக்கலாமா!

குறிப்பு 11:
எந்த சூப் செய்தாலும் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து சூப்புடன் சேர்த்து செய்து பாருங்கள், சூப் கெட்டியாக, டேஸ்ட்டியாக இருக்கும்.

குறிப்பு 12:
கூட்டு, பொரியல், வறுவல் போன்றவற்றில் உப்பு அல்லது காரம் அதிகமாக சேர்த்து விட்டால் சிறிதளவு ரஸ்க் தூளை பொடித்து சேர்த்து பாருங்கள் உப்பு, காரத்தை அது ஈர்த்துக் கொண்டு விடும்.

- Advertisement -