ஒரு கட்டு கொத்தமல்லி இருந்தா வெங்காயம் தக்காளி தேங்காய் எதையுமே சேர்க்காம ரொம்ப சிம்பிளா அதே சமயம் அட்டகாசமான இந்த சட்னியை அரைச்சிடலாம். டேஸ்ட் சும்மா வேற லெவல் இருக்கும்.

kothamalli thokku
- Advertisement -

கொத்தமல்லி சட்னி என்றால் அதற்கு தேங்காய் வெங்காயம் தக்காளி எல்லாம் வதக்கி சேர்த்து தான் அரைப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் இது எதையுமே சேர்க்காமல் ஒரு கட்டு கொத்தமல்லியை மட்டும் வைத்து ரொம்ப வித்தியாசமான சுவையில் ஒரு சட்னியை எப்படி அரைப்பது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இது சுவைகாக மட்டும் கிடையாது. இந்த கொத்தமல்லி சட்னி நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது வாங்க இந்த சட்னியை எப்படி செய்யறதுன்னு இப்ப நாம தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கட்டு கொத்தமல்லி வாங்கி அதன் வேர் பகுதியை மட்டும் எடுத்து விட்டு, காம்பு இலைகள் அனைத்தையும் கிள்ளி சுத்தம் செய்து அலசி பிறகு தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் ஐந்து பல் பூண்டு தோல் உரித்தது, ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, ஆறு காய்ந்த மிளகாய், கால் ஸ்பூன் கல் உப்பு, இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் இதை ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி அரைக்கும் போது பூண்டு மிளகாய் எல்லாம் எவ்வளவு அரைபட முடியுமோ அந்த அளவுக்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லியை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த சட்னிக்கு தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது எனவே எவ்வளவு குறைவாக ஊற்ற முடியுமோ அந்த அளவிற்கு மட்டும் ஊற்றிக் மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு பயன்படுத்தும் கிண்ணம் பிளாஸ்டிக், கண்ணாடி போன்றவை வேண்டாம் ஏனெனில் நாம் தாளிப்பு எண்ணெயை சூட்டுடன் இதில் ஊற்ற வேண்டும். ஆகைய சில்வர் பாத்திரத்தை பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் போது சட்னியின் சுவை நன்றாக இருக்கும். எண்ணெய் சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்ந்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து கொஞ்சமாக பெருங்காயத்தூளும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த 2 பொடியை அரைத்து வைத்து விட்டால் போதும். சமையலறையில் 2 மாசத்துக்கு தேவையான சமையல் தயார்.

ஏனெனில் இந்த சட்னியில் நாம் சேர்த்து இருக்கும் அனைத்து பொருளும் பச்சையாகவே சேர்த்திருக்கிறோம். ஆகையால் எண்ணெய் சூடாக ஊற்றி கலந்து விடும் போது பச்சை வாடை இல்லாமல் சுவை நன்றாக இருக்கும். இதை இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சாப்பிடலாம். சாதத்திற்கு துவையல் போலவும் வைத்துக் கொள்ளலாம் பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -