வருடத்தில் ஒரு நாள் வரக்கூடிய திருமண நாள் அன்று, இந்த 2 தீபங்களை ஏற்றினால் போதும். கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் பிரிவு ஏற்படாது.

vetri deepam

திருமண நாள் பிறந்த நாள் என்று வந்தாலே கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகின்றது. கேக் வெட்டி பிறந்த நாள் திருமண நாளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் நமக்கென்று ஒரு பழக்கவழக்கங்கள் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய சில பழக்க வழக்கங்களை நாம் மறக்கக்கூடாது. அந்த வரிசையில் தம்பதியர்கள் தங்களுடைய திருமண நாளை எப்படி கொண்டாடினால், அவர்கள் குடும்பம் ஆண்டாண்டு காலத்திற்கு, அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து, செழிப்பாக வளமாக, இருக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight4

திருமண நாள் என்றாலே தம்பதியர்கள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, தம்பதி சரீரமாக இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்‌. அவரவர் வீட்டு வழக்கப்படி, பூஜை அறையில் எப்படி பூஜை செய்வீர்களோ அதேபோல் தீபமேற்றி, இறைவனுக்கு நிவேதனம் வைத்து குடும்பத்தோடு இறைவனை வழிபாடு செய்யலாம். கட்டாயமாக கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அவரவர் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனிடம் நமஸ்காரம் செய்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக வீட்டு பெரியவர்களிடம் தம்பதிகளாக ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், திருமண நாளன்று குறிப்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அதாவது விநாயகரை வேண்டிக் கொண்டு இரண்டு மண் அகல் தீபங்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தீபமேற்றி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

vinayagar

இதேபோல் திடீரென்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எப்போதாவது வீட்டில் பிரச்சனைகள் தலை தூக்கும் போதும், இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்யலாம். முடிந்தவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று கூட 2 மண் அகல் தீபங்கள் தேங்காய் எண்ணெய் ஊற்றி விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

திருமண நாளன்று ஆலமரத்தை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வணங்கி, மூன்று முறை வலம் வந்து, நமஸ்காரம் செய்து ஆலமரத்திடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டால், இல்லற வாழ்க்கை, இனிமையாக அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆலமரத்தை அவ்வளவு சுலபமாக யாராலும் வெட்டி வீழ்த்தி சாய்த்து விட முடியாது என்று சொல்லுவார்கள். இதேபோல் உங்களுடைய குடும்பமும் ஆலமரம் போல் உயர்ந்து நிற்கவும், ஆலமர விழுது போல் உங்களுடைய வம்சம் விருத்தி அடையவும், இந்த வழிபாடும் மிகவும் சிறப்பானது.

உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது உங்களுடைய சொந்த பந்தங்களில் யாராவது வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் ஆண்டாண்டு காலமாக,  ஒன்றாக சேர்ந்து வாழக்கூடியவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு, அவர்களிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது மிகவும் நன்மையைத் தரும்.

deepam8

இதோடு சேர்த்து உங்களால் முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்றால், பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானத்தை, கணவனும் மனைவியும் சேர்ந்து செய்ய வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை வருடத்தில் ஒருமுறை திருமண நாளன்று, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடைபிடித்தாலே போதும். நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம் இல்லறம் இனிமையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.