சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர் விநாயகர் தான். சதுர்த்தி திதியில் வரக் கூடிய இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு விநாயகருக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை நினைத்து நாம் எதை வேண்டினாலும் அதை நிச்சயம் நமக்கு அருள் புரிவார். அப்படியான இந்த நன்னாளில் விநாயகருக்கு பிடித்த இந்த தீபத்தை ஏற்றினால் நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் கலைந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். அந்த தீப வழிபாடு பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

இந்த வழிபாடு நாளைய தினம் புதன்கிழமை செய்ய வேண்டும். அதுவும் சதுர்த்தி வழிபாடு எனில் மாலை நேரத்தில் செய்வது தான் சிறந்தது. அதே போல் இந்த வழிபாட்டை ஆலயத்தில் சென்று செய்வதாக இருந்தாலும் செய்யலாம் அல்லது வீட்டில் கூட செய்யலாம். இது உங்கள் விருப்பத்தை பொறுத்து.

நாளைய தினம் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேலையிலே குளித்து முடித்து சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்கி விடுங்கள். உணவு உண்ணாமல் விரதம் இருப்பவர்கள் இருந்து வழிபடலாம் அல்லது அசைவத்தை மட்டுமாவது தவிர்த்து விடுங்கள். இந்த வழிபாட்டிற்கு கோதுமை மாவை வாங்கி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு கடைகளில் விற்கும் கோதுமை மாவை வாங்குவதை விட கோதுமையாக வாங்கி நாமே அரைத்து பயன்படுத்துவது தான் நல்லது. இந்த கோதுமை மாவை நாம் எப்போதும் வீட்டில் மாவு விளக்கு ஏற்றுவது போல தயார் செய்து கொள்ளுங்கள். இதில் ஊற்றி ஏற்ற பசு நெய், பஞ்சத் திரி போன்றவற்றையும் எடுத்து கொள்ளுங்கள்.

இத்துடன் விநாயகருக்கு நெய்வேத்தியமாக அவல், பொரி கடலை வைத்து விடுங்கள். எதுவும் இல்லை என்றால் கொஞ்சம் பொட்டுக்கடலை வைத்தால் கூட போதும். இப்போது இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

விநாயகர் படத்திற்கு கொஞ்சம் அருகம்புல் வைத்து மலர்களை சூட்டி விடுங்கள். நல்ல மனம் மிக்க ஊதுபத்தி சாம்பிராணிகளை போட்ட பிறகு இந்த மாவு விளக்கை விநாயகர் படத்திற்கு முன்பு ஏற்ற வேண்டும்.
விளக்கை எறியும் போது அதன் முன் அமர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை வையுங்கள். அப்போது விநாயகர் அகவல் அல்லது விநாயகர் நாமத்தையே 108 முறை சொல்லுங்கள்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த அவல் பொரி கடலையை நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். வீட்டின் அருகில் சிறிய பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் கொடுங்கள். இந்த மாவு விளக்கு அன்றைய தினம் முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் அதை எடுத்து பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத பழி சொல் கெட்ட பெயர் நீங்க முருகன் வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியின் இந்த தீப வழிபாடு செய்து வரும் போது உங்களுடைய பிரச்சனைகள் எதுவாயினும் அது நிச்சயம் தீரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி நம்முடைய வாழ்க்கையின் செல்வநிலை உயர்ந்து நல்ல முன்னேற்றத்தையும் அடையலாம். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கை உடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -