வீட்டில் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது! தெரியாம கூட சாப்பிடுறப்போ இதை செய்யாதீங்க.

pooja-bell-food
- Advertisement -

சாப்பிடும் பொழுது பொதுவாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. சாப்பிடும் பொழுது கையை கீழே ஊன்ற கூடாது என்று கூறுவார்கள். கையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிட்டால் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் ஒட்டாது என்று நம் முன்னோர்கள் திட்டுவதை கேட்டிருப்போம். இப்படி சாப்பிடும் விஷயத்தில் இருக்கும் சாஸ்திரங்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றல் உடல் முழுவதும் வேகமாக பரவுவதில் தடை ஏற்படுகிறது. சாப்பிடும் சாப்பாட்டை பொறுமையாக மென்ற பின்பு தான் விழுங்க வேண்டும். அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலானது எதிர்வினை புரியும். இதனால் தேவையற்ற உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

- Advertisement -

சாப்பிடும் பொழுது தலையில் எண்ணெய் வைத்திருக்கக் கூடாது. குளிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒருபோதும் சாப்பாட்டை தொடக்கூடாது. வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆணோ, பெண்ணோ தலைக்கு எண்ணெயை தேய்த்து ஊற விட்டு குளிக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணமானது தனியும். மேலும் குரோதம், கோபம், வன்மம், விரக்தி, உளைச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

தலையில் எண்ணெய் வைத்திருக்கும் பொழுது ஒருவரை வழி அனுப்புவதும் கூடவே கூடாது. தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது மிகப்பெரும் சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. இன்றும் இறப்பு வீடுகளில் இறந்தவர்களுடைய உடலுக்கு எண்ணெய் தேய்த்து சீயக்காய் பூசுவது உண்டு. அந்த அளவிற்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும், நம் வாழ்வியலுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் அதை இன்று பலரும் மறந்து விட்டதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.

- Advertisement -

ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அதை அணைக்க முயல கூடாது. தீப விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதை வாயால் ஊதி அணைக்க கூடாது. மலர் அல்லது நாணயங்களை கொண்டு தீபத்தை அணைக்கலாம். குடும்பத்தில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தீபம் ஏற்றி வழிபடக்கூடாது.

சாதாரணமாக ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் மணியோசை எழுப்புவது, பூஜை செய்வது போன்றவை தவறான செயல்களாகும். வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்த பின்பு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். தலைவிரி கோலமாக ஒருவர் எண்ணெய் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால், அந்த சமயத்திலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது. தலையில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்து இருந்தால், தலைமுடியை உடனே முடிந்து விட வேண்டும். அதை தலைவிரி கோலமாக வைத்திருக்கும் பொழுது வீட்டை விட்டு யாரும் வெளியில் பயணிக்க கூடாது.

எனவே ஒருவர் பயணம் செய்யும் பொழுது இது போன்ற விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்கும், எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் நிறையவே தொடர்பு உண்டு. பிரம்ம முகூர்த்தத்தில் எழுபவர்கள் மட்டுமே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் விளக்கு ஏற்றி வழிபடலாம். மற்ற சமயங்களில் விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது. இவ்வாறாக ஒருவர் சாப்பிடும் பொழுதும், தூங்கும் போதும் பூஜை அறையிலும், மற்ற இடங்களிலும் செய்யக்கூடாத விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது ரொம்பவும் நல்லது.

- Advertisement -