சரவணபவன் ஹோட்டல் ஸ்டைலில் ஒரு தக்காளி சட்னி எப்படி செய்வது?

thakkali-chutney
- Advertisement -

எல்லார் வீட்டிலேயும் தான் தக்காளிச்சட்னி செய்வோம். ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரி சட்னியின் சுவை இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் ஒரு தக்காளி சட்னி ரெசிபியை சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். சரவணபவன் போன்ற ஹோட்டலுக்குச் செல்லும் போது ஒருவிதமான தக்காளி சட்னி வைப்பார்கள் அல்லவா. அதேபோல இதன் ருசியும் இருக்கும். சரி, இந்த ரெசிபியை தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆசையா இருக்கா. வாங்க பார்க்கலாம்.

onion

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அந்த கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த பூண்டு பல் – 4, வரமிளகாய் – 4, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, ஒரு கொத்து கருவேப்பிலை, தக்காளி – 4  நறுக்கியது சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி விட வேண்டும். இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வேக வையுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியில் இருந்து தண்ணீர் விடத் தொடங்கும்.

- Advertisement -

இந்த விழுதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து வாருங்கள். இதை வைத்து சட்னியை எப்படி தாளிப்பது.

poondu-chutney1

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொண்டு அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வரமிளகாய் இரண்டாக கிள்ளியது – 1, தோலுரித்த பூண்டு பொடியாக நறுக்கியது – 6 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதை ஊற்றி நன்றாக கலந்து விட்டு, 5 நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான தக்காளி சட்னி தயார்.

- Advertisement -

இந்த சட்னியை ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சிடலாம். உங்களுக்கு காரம் அதிகமாக தேவைப்பட்டால் வரமிளகாயை அதிகமாக வைத்துக் கொள்ளலாம். பொதுவாக ஓட்டலில் சாப்பிடும் தக்காளி சட்னி காரம் குறைவாக தான் இருக்கும் அல்லவா.

onion-chutney0

மேல் சொன்ன அளவுகளில் உங்க வீட்டில் ஒரு வாட்டி தக்காளி சட்னி ட்ரை பண்ணி பாருங்க. இந்த தக்காளி சட்னி இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -