செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு

mottai
- Advertisement -

அடுத்தவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நாம் அடுத்தவனுக்கு ஒரு கெடுதலை ஏவி விடுகின்றோம் என்றால், அந்த கெடுதல் எதிர்காலத்தில் மீண்டும் நம்மை வந்து தாக்கும் என்ற எண்ணம், பயம் யாருக்குமே இருப்பது கிடையாது.

அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாதீங்க. அடுத்தவர்கள் அழிந்து போக வேண்டும் என்ற எண்ணத்தை மனதாலும் நினைக்க வேண்டாம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் செல்வோம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு

ஒரு குடும்பத்திற்கு ஏவல் பில்லி சூனியம் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஒரு வீட்டில், ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு சுலபமாக அந்த குடும்பத்தை கெட்ட சக்தி தாக்காது. அந்த குடும்பத்திற்கு காவல் தெய்வமாக, அந்த வீட்டு குலதெய்வம் நிச்சயம் நிற்கும். இதுதான் முதல் விஷயம்.

ஒவ்வொரு குடும்பமும் தினம் தினம் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். எந்த குடும்பத்தில், வருடம் தோறும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்களோ, வீட்டில் இருப்பவர்கள் குலதெய்வத்திற்கு தங்களுடைய முடியை காணிக்கையாக கொடுக்கிறார்களோ, அந்த வீட்டில் செய்வினை பாதிப்பு இருக்காது.

- Advertisement -

இப்படிப்பட்ட குடும்பத்தில் யாரும் அவ்வளவு எளிதாக செய்வினை வைக்க முடியாது. அதாவது வருஷத்துக்கு ஒரு முறை குடும்பத்தோடு சென்று முறையான குலதெய்வ வழிபாடு செய்து விட்டு, வீட்டில் இருப்பவர்கள் மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடித்து குலதெய்வத்திற்கு வழிபாடு செய்தாலே உங்களைப் பிடித்த கெட்ட நேரம் விலகிவிடும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும் குடும்ப தலைவர், தலைமுடியை குலதெய்வ கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்து வேண்டுதல் வைப்பது சிறப்பு. இந்த வழிபாட்டை குலதெய்வ கோவிலில் செய்தால் நல்ல நேரம் கை கொடி வரும் என்பதுதான் நம்பிக்கை. அதனால்தான் அந்த காலத்திலேயே பிறந்த குழந்தையை ஒரு வயதிற்கு முன்பாகவே கொண்டு போய் குலதெய்வ கோவிலில் மொட்டை போட்டு காது குத்தும் வழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு பின்னால் ஆயிரம் அறிவியல் உண்மைகள் இருக்கலாம். ஆனால் ஆன்மீக ரீதியாக நாம் இந்த விஷயத்தை கடைப்பிடித்து வரும்போது நம் குடும்பத்திற்கு கெட்ட நேரமோ அல்லது கெட்ட சக்தியின் மூலம் பாதிப்பு வராது என்பதுதான் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலம் தழைக்கும். குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி போக பரிகாரம்

இதையும் தாண்டி உங்களுக்கு வேறு ஏதேனும் செய்வினை கோளாறுகளின் மூலம் அதிகமான பாதிப்புகள் இருந்தால் உங்களுடைய ஜாதகத்தைக் கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பித்து அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவல்னுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -