நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

pet-animals-food
- Advertisement -

நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு. இப்படி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அனுதினமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் அவற்றிற்கு நாம் உணவினை தானமாக இட்டு வருகிறோம். தெரிந்தோ தெரியாமலோ வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னதானம் செய்த பலன் இதிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறுகிறது. எனவே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான புண்ணியங்கள் கிடைக்கும்? என்கிற தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

dog

நாய், பூனை போன்ற ரோம உதிரிகளாக இருக்கும் செல்லப்பிராணிகளை சற்று தள்ளி வைத்து வளர்க்க வேண்டும். நம் வீட்டு குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்கும் இந்த செல்லப்பிராணிகள் ரோம உதிரிகளாக இல்லாவிட்டால் எப்படி வேண்டுமானாலும் நாம் தாராளமாக வளர்க்கலாம். ஆனால் இயற்கையாக ரோம உதிரியாக பிறந்த இந்த செல்லக் குழந்தைகளை, செல்லப் பிராணிகளை வீட்டிற்குள் குழந்தைகளுடன் விளையாட வைப்பது, படுக்க வைப்பது, நம் படுக்கை அறையில், படுக்கையில் அனுமதிப்பது போன்ற செயல்களை கூடுமானவரை தவிர்ப்பது தான் நல்லது.

- Advertisement -

செல்லப் பிராணிகளின் ரோமங்கள் அடிக்கடி ஆங்காங்கே உதிர்ந்து விடும். இதனால் நாம் சாப்பிடும் உணவிலும் அவை பறந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு இந்த ரோமங்கள் மூலம் ஒருவிதமான ஒவ்வாமை மற்றும் அலர்ஜி ஏற்படும். எனவே செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும் ஒரு முறை உண்டு. அதை கடைப்பிடித்து நாம் அன்போடு வளர்த்தால் அதனால் உண்டாகக்கூடிய பலன்கள் ஏராளம்.

cat

பொதுவாக எந்த ஒரு தானத்தையும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் பொழுது தான் அதன் பலன் நமக்கு முழுமையாக வந்தடையும். இந்த தானத்தை செய்தால், இந்த பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு அந்த பலனுக்காக நாம் தானம் செய்யும் பொழுது அதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழி ஒன்று உண்டு.

- Advertisement -

எனவே நாம் செய்யும் தானத்தை பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பது தான் சூட்சமும் ஆகும். அந்த வகையில் வீடுகளில் வளர்க்கப்படும் இந்த செல்லப்பிராணிகளுக்கு நாம் நம் கைகளால் அனுதினமும் பசியாற்றி வருகிறோம். கர்ம வினை குறைய இது போல வாயில்லா ஜீவராசிகளுக்கு நாம் நம் வாழ் நாளில் 2% ஆவது தினமும் தானம் செய்து இருக்க வேண்டுமாம். புண்ணிய பலனை பன்மடங்கு பெருக செய்யவும், பாவப் பலன்களை பாதியாக குறைத்துக் கொள்ளவும் நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மட்டுமல்லாமல் வெளியில் இருக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அவ்வப்போது தானங்களைச் செய்து வர வேண்டும்.

rice

வீணாக எவ்வளவோ உணவு வகைகளை நாம் குப்பையில் கொட்டுகிறோம். அப்படி செய்யாமல் அதனை முறையாக பிரித்து அந்தந்த விலங்குகளுக்கு நீங்கள் தானம் செய்தால் உங்கள் குடும்பம் மட்டுமல்லாமல், உங்களுக்கு அடுத்து வரும் சந்ததியினரும் நோய் நொடி இல்லாமல், வறுமை இல்லாமல், செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். தானங்களில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் அனுதினமும் இரண்டு சதவீதத்தை வாயில்லா ஜீவராசிகளுக்கும், மற்ற தானங்களை பல்வேறு வகைகளிலும் நீங்கள் வழக்கமாக செய்து வந்தால், அது உங்களை மட்டுமல்லாமல், உங்களை சார்ந்தவர்களையும் பலன் அடைய செய்யும்.

- Advertisement -