இந்த பொருளால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து அவரை வழிபட்டால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு, செல்வ செழிப்பும் ஏற்படும்.

hanuman
- Advertisement -

இந்த உலகத்தில் ஒருவர் மீது எந்த அளவுக்கு எப்படி பக்தி வைக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர். அவர் பெயரை சொல்லி அழைப்பதை விட அவர் பக்தி செலுத்திய ராமபிரானின் பெயரை சொல்லி அழைத்தாலேயே அவர் ஓடி வந்து நமக்கு உதவிகள் பல செய்வார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு என்ன அபிஷேகம் செய்து எப்படி வழிபட்டால் அவரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பக்தர்களை சோதிக்காமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும் தெய்வங்களில் விநாயகரும் அனுமனும் தான் முதன்மை இடத்தை வகிக்கிறார்கள். விநாயகரை எப்படி நாம் மஞ்சளை பிடித்து வைத்து அதில் ஒரு அருகம் புல்லை வைத்து வணங்கினால் அவர் மனம் குளிர்வாரோ, அதே போல் நாம் ஆஞ்சநேயருக்கு குங்குமத்தில் ராமா ராமா என்று எழுதி ஒரு துளசி இலையை வைத்து வழிபடுவதன் மூலம் அவரின் அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஹனுமனுக்கு உகந்த கிழமை என்று அனைவரும் நினைப்பது சனிக்கிழமை என்றாலும், செவ்வாய்க்கிழமையும் அவருக்கு மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. இந்த இரண்டு கிழமைகளிலும் அவரை நாம் ராமா ராமா ராம பக்தா என்று சொல்லி வழிபட்டாலேயே நமக்கு நன்மைகளை தருவார். அதைவிட அவருக்கு அபிஷேகம் செய்து பார்த்தோம் என்றால் இன்னும் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கும்?

இந்த அபிஷேகத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள் ஒன்றே ஒன்றுதான் அதுதான் தேங்காய் அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை செய்யும் பொழுது தேங்காய் உடைத்து நாம் அர்ச்சனை செய்வோம் ஆனால் அந்த தேங்காயை உடைத்து அதில் இருக்கும் நீரை சேகரித்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தோம் என்றால் அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.

- Advertisement -

தேங்காய் தண்ணீரை எடுத்த பிறகு அந்த தேங்காயில் குங்குமத்தை தடவி அவர் பாதங்களில் வைக்க வேண்டும். அவருக்கு துளசி மாலை அணிவித்து, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். ஆஞ்சநேயருக்கு பிடித்தமான பொருளான லட்டுவை நெய்வேத்தியமாக வைத்து நாம் வழிபடுவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து நாம் கேட்கும் வரம் அனைத்தையும் தருவார்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுபவர்களா நீங்கள்? அப்படியானால் இனி இந்த முறையில் வழிபட்டு பாருங்கள் மகாலட்சுமி தாயாரின் அருளோடு சுக்கிர யோகத்தையும் சேர்த்தே பெறலாம்.

பலருக்கும் பிடித்த தெய்வமாக இருக்கக் கூடிய ஆஞ்சநேயருக்கு இந்த எளிமையான அபிஷேகத்தை நாமும் செய்து அவரின் அருளைப் பெற்று செல்வ செழிப்புடன், தைரியத்துடனும் வாழ்வோம்.

- Advertisement -