எல்லோரையும் செல்வந்தர்களாக மாற்றும் லிங்க வழிபாடு

lingam
- Advertisement -

செல்வமழை பொழிய வைக்கும் சிவலிங்க வழிபாடா. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பலரும் சிந்திக்கலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பிறகு எப்படி லிங்க வழிபாடு செய்வது. அதில் தான் சூட்சமம் மறைந்திருக்கிறது. பலருக்கும் தெரியாத, செல்வ வளத்தை கொடுக்கும் சிவலிங்க வழிபாட்டை பற்றிய பூஜை சார்ந்த பல அறிய தகவல்களைத் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அமர்நாத் பனி லிங்கம் வழிபாடு

அமர்நாத்துக்கு போய் பனிலிங்கத்தை வழிபாடு செய்வதா? இது எல்லோருக்கும் சாத்தியமா. கிடையாதுங்க, உங்க வீட்டிலேயே ஒரு சின்ன பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி ஃப்ரீசரில் வையுங்கள். கொஞ்சம் உயரமாக இருக்கும் டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட்டால், அது ஐஸ் கட்டியாக மாறிவிடும்.

- Advertisement -

அந்த ஐஸ் கட்டியை கவிழ்த்து வைக்கும் போது ஐஸ் கட்டியில் உங்களுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்திருக்கும். அதை எடுத்து ஒரு தாம்பூல தட்டில் வையுங்கள். அந்த சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி பசும்பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். ஐஸ் கட்டி கரையத்தான் செய்யும். தவறு கிடையாது.

அபிஷேகத்தை முடித்துவிட்டு அந்த ஐஸ் கட்டிக்கு சந்தன குங்குமப்பொட்டு வைத்து, வில்வ இலைகளால் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து ‘ஓம் ஐஸ்வர்யேஸ்வரரே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தையும் உச்சரித்து அர்ச்சனை செய்து செல்வந்தராக வேண்டும் என்ற பிரார்த்தனையை மனதார வையுங்கள்.

- Advertisement -

இந்த ஐஸ்கட்டி கரையும் வரை கூட உங்களுடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. பூஜை முடிந்த பிறகு ஒரு தட்டில் இந்த ஐஸ் கட்டி எல்லாம் கரைந்து இருக்கும் அல்லவா. அதில் வில்வ இலைகள் இருக்கும் அல்லவா இந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். மீதமிருக்கும் தண்ணீரை வீட்டு செடியில் ஊற்றி விடுங்கள்.

உங்களுடைய வீட்டில் இந்த தீர்த்தத்தின் மூலமாக சிவபெருமான் நிரந்தரமாக தங்கிவிடுவார். மிக மிக எளிமையான வழிபாடு இது. ஆனால் சக்தி வாய்ந்த வழிபாடு. வழக்கம்போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபாடு செய்து. நீங்கள் தயார் செய்த இந்த ஐஸ் கட்டி லிங்கம் தான் அமர்நாத் பனி லிங்கம்.

- Advertisement -

இந்த லிங்கத்தை வழிபாடு செய்யும்போது எல்லோருக்கும் ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கும். வறுமை நீங்கும். கடன் சுமை குறையும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். இந்த வழிபாட்டை எந்த நாளில் செய்வது. பிரதோஷ தினத்தில் செய்யலாம். வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: வாஸ்துபடி சமையலறையிலும் கழிவரையிலும் செய்யக்கூடாத தவறு

பிரதோஷ நேரத்தில் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்கத்திற்கு வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் கஷ்டமே இருக்காது என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. சிவபெருமானின் இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -