சாம்பாரை சாதத்துடன் ஊற்றி சாப்பிடும் ருசியைவிட, இப்படி கலவை உணவாக செய்யும் பிஸ்மில்லா பாத் அட்டகாசமான சுவையில் இருக்கும்

bisibel
- Advertisement -

அனைவரது வீட்டிலும் அடிக்கடி செய்யும் ஒரு குழம்பு வகை என்றால் அது சாம்பார் மட்டும்தான். சாம்பாரை பல முறையில் செய்யமுடியும் தக்காளி சாம்பார், வெங்காய சாம்பார், மிளகாய் கிள்ளி சாம்பார் என்றும், அதேபோல் காய்கறிகள் சேர்த்து அவரைக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் என்றும் பல வகைகளில் இந்த சாம்பாரை செய்ய முடியும். ஒவ்வொரு விதமான சாம்பார் செய்யும் பொழுதும் அதன் ருசியில் தனிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும். இவ்வாறு செய்யும் சாம்பாரை சேர்த்து சாப்பிடும் சாதம் எந்த அளவிற்கு ருசியாக இருக்கிறதோ, அதைவிட பருப்பு, காய்கறிகள் சேர்த்து செய்யும் இந்த பிஸ்மில்லா பாத் பலமடங்கு சுவையில் இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிமையான விஷயம்தான். குழம்பு, சாதம் என்று தனியாக செய்வதைவிட இவ்வாறு செய்யும்பொழுது நேரமும் குறைவாக இருக்கும், இதன் சுவையும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 500 கிராம், துவரம்பருப்பு – 400 கிராம், சின்ன வெங்காயம் – 20, குடை மிளகாய் – 1, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1,பீன்ஸ் – 10, பச்சை பட்டாணி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – 25 கிராம்9 கொப்பரை தேங்காய் – அரைமூடி, தனியா – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், சாம்பார் பொடி – 6 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நெய் – 100 மில்லி, எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு குத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரிசி, பருப்பு இவை இரண்டையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றிற்கு 4 பங்கு அளவு தண்ணீர் வைத்து, குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், கேரட், பீன்ஸ் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 25 கிராம் புளியை தண்ணீரில் ஊறவைத்து, அரை லிட்டர் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பு, தனியா மற்றும் அரை மூடி கொப்பரைத் தேங்காயை துருவி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்கி, அவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில் 100 மில்லி நெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை லிட்டர் புளி கரைசலை சேர்த்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பிறகு இவற்றில் உப்பு மற்றும் 6 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் இவற்றுடன் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு சாதத்தை இவற்றுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, இவற்றை சாதத்துடன் சேர்த்து கலந்துவிட்டு, கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும்

- Advertisement -