இட்லி அரிசியோடு 2 ஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! சொதப்பலான மாவில் கூட, சூப்பரான புசுபுசு மல்லிகைப்பூ இட்லி கிடைக்கும்.

idli
- Advertisement -

பொதுவாகவே இட்லிக்கு மாவு அரைப்பது என்பது ஒரு கலை. மாவு ரொம்ப கெட்டியாக இருந்தாலும் நம் சுடக்கூடிய இட்டிலி கல்லு போல மாறிவிடும். அரைத்த மாவு ரொம்பவும் தண்ணீர் ஆகிவிட்டாலும் இட்லி சப்பையாக கிடைக்கும். உளுந்து அதிகமாகி விட்டால் பிரச்சனை. அரிசி அதிகமாக விட்டாலும் பிரச்சனை. உளுந்து புசுபுசுவென பொங்கி வராவிட்டாலும் பிரச்சனை. சூப்பர் இட்லியை செய்வதற்கு எத்தனை சிரமம். அது இல்லத்தரசிகளுக்கு தான் தெரியும்.

நீங்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது அந்த அரிசியோடு 2 ஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைத்து பாருங்கள். நிச்சயமாக மாவின் பக்குவம் தவறவே தவறாது. நீங்க இட்லி சுட்டா, இட்லி புசுபுசுன்னு தான் வரும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ஒரு பொருள் என்ன. அதை இட்லி அரிசியில் சேர்த்து எப்படி அரைக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இட்லி அரிசி – 4 டம்ளர், 2 டேபிள்ஸ்பூன் – பொட்டுக்கடலை போட்டு, 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இன்னொரு அகலமான பாத்திரத்தில் உளுந்தம் பருப்பு – 1 டம்ளர், வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அந்த ஸ்பெஷலான பொருள் பொட்டுக்கடலை தான். (வழக்கம் போல இட்லி அரிசி பருப்பு வகைகளை எப்படி கழுவுவீர்களோ அதேபோல கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள்).

பிறகு ஊறிய பொருட்களை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்க வேண்டும். முதலில் உளுந்து வெந்தயத்தை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து புசுபுசுவென ஆட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அரிசி பொட்டுக்கடலை சேர்ந்த கலவையை போட்டு ஆட்டி, அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக போட்டு, மாவுக்கு தேவையான அளவு உப்பையும் போட்டு உங்கள் கையைக் கொண்டு நன்றாக கரைத்து விட வேண்டும். கிரைண்டரை கழுவி அந்த தண்ணீரை இந்த மாவில் ஊற்றி கரைக்க வேண்டும்‌. அது மாவு புளிப்பதற்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

இந்த மாவை அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். 8 மணி நேரம் புளிக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து இந்த இட்லி மாவை நன்றாக அடியோடு சேர்த்து ஒரு கரண்டியை போட்டு கலந்து எப்போதும் போல இட்லி சட்டியில் இட்லியை வார்த்து வேகவைத்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் செய்யும் இட்லிக்கும், இப்போது செய்து வைத்திருக்கும் இட்லிக்கும் நன்றாகவே வித்தியாசம் தெரியும்.

அடுப்பில் இட்லி பானையை வைத்து விட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துவிட்டு அதன் பின்பு, தட்டில் இட்லி வார்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் இட்லி நன்றாக வெந்து புசுபுசுவென கிடைக்கும். அதேசமயம் இட்லி வேகும் போது அடுப்பை ரொம்பவும் சிம்மில் வைக்க கூடாது. மீடியம் ஃபிளேமில் வைக்க வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த இட்லி மாவில் பொட்டுக்கடலை சேர்த்து இருப்பதால் கூடுமானவரை மாவை பிரிட்ஜில் வைத்தால் கூட 4 நாட்களில் இருந்து 5 நாட்கள் வரை தான் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும். அதற்கு மேலே இந்த மாவு கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -