அனைத்து குழம்பையும் ஓரம் கட்டும் வகையில் இந்த சாம்பாரின் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். சுவையான மிளகாய் கிள்ளி சாம்பாரை இப்படி வச்சு பாருங்க. குழந்தைகளும் கூட மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்

sambar
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது சாம்பார் வைத்து விடுவார்கள். அதிலும் இந்த மிளகாய் கிள்ளி சாம்பாரை நினைத்த உடனே சட்டென செய்து விடலாம். ஆனால் சாம்பார் மட்டும் எத்தனை முறை சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் உள்ள அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். ஏனென்றால் இருவருக்குமே பிடித்தமான ஒன்றாகும். அப்படி அனைவருக்கும் பிடித்த இந்த மிளகாய் கிள்ளி சாம்பாரை சமைக்கத் தெரியாதவர்கள் கூட உடனடியாக சமைக்க முடியும். அந்த அளவிற்கு இதனை செய்வது என்பது மிகவும் எளிமையான விஷயமாகும். வாருங்கள் இதனை எப்படி சமைக்கவேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

idli-sambar2

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – இரண்டு டம்ளர், வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் 2 டம்ளர் துவரம்பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய், 10 பல் பூண்டு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடி கொள்ள வேண்டும்.

thuvaram-paruppu

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, குக்கரை அடுப்பின் மீது வைத்து, 6 விசில் வரும்வரை பருப்பை வேக விடவேண்டும். பிறகு குக்கரை இறக்கி வைத்து, குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து, பருப்பு கடையும் மத்து வைத்து பருப்பை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 6 காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி கொண்டு, எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கடைந்து வைத்துள்ள பருப்பை ஊற்றி அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

killi-sambar1

பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொண்டு, சாம்பாரில் சேர்க்கவேண்டும். புளி சேர்த்த பிறகு சாம்பாரை நன்றாக கொதிக்க விடவேண்டும். 5 நிமிடம் இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் தயாராகிவிட்டது.

- Advertisement -