தவமாக தவம் இருந்தாலும் இப்படி ஒரு தக்காளி சட்னியை நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அப்படி ஒரு ருசியான இந்த தக்காளி சட்னி ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க.

pudhina-chutney
- Advertisement -

தக்காளி சட்னியை சாப்பிட கூட தவம் இருக்கணுமா என்ன. ஆமாங்க, இப்படிப்பட்ட ஒரு தக்காளி சட்னியை சாப்பிட நிச்சயமாக நம் நாக்கு தவம் செய்து இருக்க வேண்டும். அப்படி ஒரு ருசி நிறைந்த தக்காளி சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுமையை சேர்க்கும். வழக்கம் போல 4 இட்லி, சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு இட்லியை சாப்பிடும் அளவுக்கு பசியை தூண்டக்கூடிய ஒரு அருமையான தக்காளி சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வர மல்லி 1/2 ஸ்பூன், போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களும் பாதியளவு வறுபட்டு வந்த பிறகு வர மிளகாய் 3, பச்சை மிளகாய் 2, தோலுரித்த பூண்டு பல் 10 போட்டு மீண்டும் வறுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பொருட்கள் எல்லாம் ஓரளவுக்கு சிவந்து வந்தவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் 1, சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் லேசாக கண்ணாடி பதம் வந்ததும் நறுக்கிய தக்காளி பழம் 3 சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி எல்லாம் நன்றாக வெந்து, தக்காளியின் தோல் பிரிந்து வர வேண்டும்.

பச்சை வாடை தக்காளியில் போன பிறகு 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை இதில் போட்டு, சிறிய கோலிகுண்டு புளி, போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக சட்னிக்கு தேவையான அளவு உப்பை போட்டுக் கொள்ளுங்கள். இந்த விழுது நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

ஆறிய பின்பு இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த சட்னியை அரைத்துக் கொள்ள வேண்டும். சட்னி ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. ஓரளவுக்கு திக்காக இருந்தால்தான் ருசி இருக்கும். அதே சமயம் நீங்கள் கொத்தமல்லி தழை வைக்கும் அளவை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த தக்காளி சட்னி பச்சை நிறத்திற்கு மாறக்கூடாது. ஆனால் மல்லி தழையின் வாசம் அதில் நன்றாக வரும். அந்த அளவுக்கு கொத்தமல்லி தழையை வைத்தால் போதுமானது. கொத்தமல்லி தழையை அதிகமாக வைத்துவிட்டால் மல்லி சட்னி போல மாறிவிடும்.

- Advertisement -

பச்சை நிறம் வராமல் லேசாக சிவப்பு நிற சட்னியில் ஆங்காங்கே பச்சை நிறம் தெரிவது போல இந்த சட்டியை அரைக்க வேண்டும். அப்போதுதான் இந்த சட்னியின் சுவை ஸ்பெஷல் ஆக நமக்கு இருக்கும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ஒரு மணி நேரம் வேகற அரிசியை கூட பத்து நிமிஷத்துல குக்கரில் அதுவும் உதிரி உதிரியா வடிச்சு சமைக்கலாம் தெரியும்மா? இது தெரியாம இத்தனை நாள் டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே கண்டிப்பா பீல் பண்ணவிங்க.

2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அதை அப்படியே சட்னியில் கொட்டி சாப்பிட்டு பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்ங்க. யாருமே இந்த சட்னியை மிஸ் பண்ணிட கூடாது. கட்டாயம் நாளைக்கு காலையில உங்க வீட்ல இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இந்த சட்னி தான்.

- Advertisement -