ஸ்டார் ஓட்டல்களில் பின்பற்றப்படும் முக்கிய சமையல் குறிப்புகளை தெரிந்து கொண்டால் போதும். நீங்களும் சமையலில் ஸ்டார் ஆகலாம்

cooking2
- Advertisement -

பலவகையான உணவுகளை வீட்டில் சமைத்துக் கொடுத்தாலும் அதன் சுவை ஓட்டலில் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சுவையை விட குறைவாகத்தான் இருக்கும். வீட்டில் செய்வதற்கும் ஓட்டலில் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவ்வாறு பெரிய ஸ்டார் ஓட்டல்களில் சுவையைக் கூட்டுவதற்கும், வேலையை குறைப்பதற்கும் பின்பற்றும் சில எளிய குறிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

semiya

டிப்ஸ் 1:
ஹோட்டல்களில் பிரியாணியை பரிமாறி கொடுக்கும் போது அதன் மீது பொரித்து வைத்த வெங்காயத்தை சேர்த்து கொடுப்பார்கள். அப்பொழுது அந்த பிரியாணியின் சுவை நன்றாக இருக்கும். இதே போன்ற வறுத்த வெங்காயத்தை அதே சுவையில் வீட்டிலேயும் செய்யலாம். அதற்கு முதலில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து கொண்டு, அதன் நடுவில் இருக்கும் குறுத்து பகுதியை நீக்கி விட்டு, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் சிறிதளவு கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து பிரட்டி வைத்து, மிதமான தீயில் வறுத்து எடுக்கவேண்டும். பிரியாணி செய்வதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்னரே இதனை செய்து விட்டு பிரியாணியை பரிமாறும் பொழுது சேர்த்து பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

டிப்ஸ் 2:
வீட்டில் ஆட்டுக்கறி பிரியாணி செய்யும் பொழுது சிலசமயங்களில் ஆட்டுக்கறி சரியாக வேகாமல் இருக்கும். அதற்கு முதலில் தக்காளி வெங்காயத்துடன் கறியை சேர்த்து வதக்க்கும் போது பாதி அளவு உப்பினை மட்டுமே சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். நன்றாக வதங்கிய பின்னர் மீதி அளவு உப்பினை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆட்டுக்கறி பிரியாணியை பாத்திரத்தில் சமைத்தாலும் கூட கறி நன்றாக வெந்து வரும்.

mutton

டிப்ஸ் 3:
வீட்டில் பாயாசம் செய்யும் பொழுது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து சமைத்தால், சர்க்கரை ஒரு கப் சேர்ப்பதாக இருந்தால் வெல்லம் ஒன்றரை கப் சேர்க்க வேண்டும். அதுவே நாட்டு சர்க்கரையாக இருந்தால் ஒன்னே முக்கால் கப் சேர்க்கவேண்டும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும்.

- Advertisement -

டிப்ஸ் 4:
ஓட்டலில் பிரியாணியுடன் சேர்த்துக் கொடுக்கும் முட்டைகள் சிறிதும் உடையாமல் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டில் நாம் வேகவைத்து உரிக்கும்போது முட்டைகள் தோலுடன் ஒட்டிக்கொண்டு சரியாக உரிக்க வராமல் இருக்கும். இதற்காக ஓட்டலில் கையாளும் முறை என்னவென்றால் முட்டைகளை வேக வைக்கும்போது அதனுடன் குளிர்ந்த நீரை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 15 நிமிடங்கள் மிதமான வேக வைக்க வேண்டும். பின்னர் ஐந்து நிமிடங்கள் முட்டையை குளிர்ந்த நீரில் ஆற வைத்து, பின்னர் உரித்தால் மூட்டை ஓட்டுடன் ஒட்டாமல் தனியாக வரும்.

egg

டிப்ஸ் 5:
வீட்டில் இறால் சமைக்கும் பொழுது சிலசமயங்களில் இறாலின் சுவை நன்றாக இருப்பதில்லை. இதற்கு காரணம் இறாலை தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கும் பொழுது 10 லிருந்து 12 நிமிடங்கள் மிதமான தீயில் மட்டுமே வதக்க வேண்டும். அதனை தவிர்த்து இறாலை 15 நிமிடங்களுக்கு மேல் வதக்கி சமைக்கும்போது அவை ரப்பர் போன்று மாறி அதன் சுவையில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

- Advertisement -