குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பிரச்சனையும், துன்பமும் சரியாக ஒருவர் மட்டும் இந்த வழிபாட்டை இந்த முறையில் செய்தால் போதும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் பொங்கி வழியும்.

suriya
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் உள்ள ஒருவர் அனைவருக்கவும் சேர்த்து உழைக்க வேண்டும். அதே போல இந்த வழிபாடும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கவும் ஒருவர் மேற் கொண்டாலே அனைவரின் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். இப்படி குடும்பத்தில் இருக்கும் அனைவருக்காக ஒரே ஒரு நபர் மட்டும் செய்யும் இந்த எளிய சக்தி வாய்ந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களில் முதல்வராக கருதப்படும் சூரிய பகவானே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறார். ஆரோக்கிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சூரிய ஒளி நம் மீது படுவதன் மூலம் நமக்கு எண்ணிலடங்கா பல நல்ல பலன்கள் கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் சூரிய வழிபாட்டை அன்றாடம் மேற்கொண்டு வந்தனர். ஆதலாலேயே அவர்கள் ஆரோக்கியமாக திகழ்ந்தனர். அப்படிப்பட்ட சூரிய வழிபாட்டை எவ்வாறு மேற்கொள்வது? அதனால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

சூரிய வழிபாட்டு முறை
சூரிய வழிபாடு மேற்கொள்ள உகந்த நேரமாக சூரிய உதய நேரத்தை கூறுகிறார்கள். அதாவது காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக சூரிய உதயம் நிகழும். அந்த நேரத்தில் நாம் நீராடி, பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். சூரிய உதயம் ஆகும் பொழுது கிழக்குப் பார்த்தவாறு, அதாவது சூரியனை பார்த்தவாறு நின்று ஒரு செம்பில் சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி மூன்று முறை அந்த தீர்த்தத்தை பூமியில் இடவேண்டும்.

இப்படி சூரிய பகவானை கைகூப்பி வணங்கி எந்த அளவுக்கு நேர்மறையாக வேண்டுதல்களை வைக்க முடியுமோ அந்த அளவுக்கு நேர்மறை வேண்டுதல்களை வைக்க வேண்டும். பிறகு தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். கடைசியாக சூரிய பகவானை நினைத்தபடி மூன்று முறை தன்னைத் தானே வலம் வர வேண்டும். அதாவது பிரதக்ஷணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் தினமும் சூரிய வழிபாடு மேற்கொள்வதால் நமக்கும், நம் வீட்டில் இருக்கும் மந்த நிலைகள் மாறும். சூரிய பகவானிடம் இருந்து நேர்மறையான ஆற்றல்களை உத்ரகித்துக் கொள்ள முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களுடன் நாம் வீட்டிற்குள் நுழையும் பொழுது வீட்டிற்குள்ளும் அந்த நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும். நம் அருகில் இருக்கும் நம் குடும்பத்தாருக்கும் அந்த நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் முன்னேற்றம் அனைத்தையும் முறியடிக்கும் இந்த பித்ரு தோஷத்தை போக்க பௌர்ணமி இந்த ஒரு பொருளை தானமாக வழங்கினால் போதும். பித்ரு தோஷத்தை போக்கி நிம்மதியாக வாழ எளிய பரிகாரம்

சோம்பேறித்தனம் மறைந்து, சுறுசுறுப்பு ஏற்படும். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். மேலும் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியத்துடனும் வாழலாம். இந்த ஆன்மீக பரிகாரத்தை செய்வதின் முலம் வாழ்க்கை தரம், ஆரோக்கியம் இரண்டையும் சேர்த்தே பெறலாம் என்ற தகவவலுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -