தேங்காய் சட்னி ருசியாக இருக்க ரகசியமாக இதைத்தான் சேர்க்கிறார்களா? நாமளும் சேர்த்து பார்ப்போமா?

thalicha-coconut-chutney
- Advertisement -

பொதுவாக தேங்காய் சட்னி என்பது அடிக்கடி இட்லி, தோசைக்கு நம் வீட்டில் எளிதாக அரைக்கக் கூடிய ஒரு வகையான சட்னி ஆகும். அஞ்சு நிமிஷத்தில் சட்டுனு செய்யக் கூடியதால் இதை அடிக்கடி செய்து விடுவோம். ஆனால் ஹோட்டலில் கொடுக்கப்படும் தேங்காய் சட்னியின் ருசியே வேறாக இருக்கும். அதைவிட தள்ளு வண்டிகளில் கொடுக்கப்படும் தேங்காய் சட்னியில் அவ்வளவு சுவை இருக்கும். தண்ணீர் போல இருந்தாலும், இதன் சுவைக்கு என்ன காரணம்? என்று தெரியாமல் நாம் முழித்திருப்போம். இத்தகைய தள்ளுவண்டி ருசியான தேங்காய் சட்னியை அரைப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
அரை மூடி – துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் – ஐந்து, பச்சை மிளகாய் – ரெண்டு, வர மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கருவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, உடைத்த கடலை அல்லது வேர்கடலை – அரை கப். தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன்.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
அரை மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காயை சேருங்கள். பின்னர் இதனுடன் ஐந்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள்.

அரை கப் அளவிற்கு வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை அல்லது உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை சேர்த்தால் வேர்க்கடலை சட்னி என்றும், உடைத்த கடலை சேர்த்தால் தேங்காய் சட்னி என்றும் கூறி விடுவார்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய், ஒரு வரமிளகாய் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு துண்டு சிறு இஞ்சி, ஒரு கொத்து கருவேப்பிலை, சிறிதளவு மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கல் உப்பு சட்னிக்கு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த தேங்காய் சட்னிக்கு ஒரு சூப்பரான தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிக்க அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் சமையல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும், சீரகம் தாளித்து ஒரு வரமிளகாயை கிள்ளி சேருங்கள்.

பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி தாளித்து சட்னியுடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இதில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் சேர்த்தாலும், ருசி மாறாது டேஸ்டியாக இருக்கும். இட்லி, தோசை, வடை, பணியாரம் போன்ற எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கக்கூடிய இந்த தள்ளுவண்டி சுவையான தேங்காய் சட்னி இப்படித்தான் நீங்களும் செய்து பாருங்களேன்.

- Advertisement -