காரசார மிளகாய் சட்னி இரண்டே நிமிடத்தில் இப்படி வச்சா பத்து, பதினைந்து இட்லி கூட உள்ளே போகும்!

kara-chutney-chilli
- Advertisement -

காரமான காரசார மிளகாய் சட்னி தொட்டுக் கொள்ள இருந்தால் பத்து, பதினைந்து இட்லிகள் கூட சரளமாக உள்ளே போய்க் கொண்டே இருக்கும். காரத்திற்கு பெயர் போன ஆந்திராவில் செய்யப்படும் இந்த வகையான மிளகாய் சட்னி ரொம்பவே பிரசித்தி பெற்றது. மிளகாய், பூண்டு, புளி, சின்ன வெங்காயம் எல்லாம் வைத்து செய்யப்படும் இந்த கார சட்னியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அதிக ருசியை கொடுக்கும் இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசை மட்டுமல்லாமல் சாதம், சப்பாத்திக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த சுவை மிகுந்த மிளகாய் கார சட்னி எப்படி நாம் எளிதாக தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

red-chilli

மிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஐந்து, பூண்டுப் பற்கள் – 10, வர மிளகாய் – ஐந்து, காஷ்மீரி மிளகாய் – ஐந்து, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

மிளகாய் சட்னி செய்முறை விளக்கம்:
காரசாரமான இந்த மிளகாய் சட்னியை செய்வதற்கு 10 மிளகாய்கள் தேவை. அதில் ஐந்து மிளகாய் வர மிளகாய், 5 மிளகாய் காஷ்மீரி மிளகாய் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்போது தான் நிறம் மற்றும் காரம் அட்டகாசமாக அமையும். அதே போல பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

chilli

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு முதலில் நன்கு வதக்குங்கள். சின்ன வெங்காயம் நன்கு வதங்கி வரும் சமயத்தில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு நன்கு வதக்குங்கள். பூண்டு மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

5 சாதாரண வர மிளகாய், ஐந்து காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை காம்பு நீக்கி சேர்த்து இப்போது வதக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து எந்த அளவிற்கு நீங்கள் வறுத்து எடுக்கிறீர்களோ அந்த அந்த அளவிற்கு சட்னியும் ருசியாக அமையும். பின்னர் எல்லா பொருட்களையும் எண்ணெயிலிருந்து நன்கு வடிகட்டி எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு ஆறியதும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைஸாக மிக்ஸியை இயக்கி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

milagai chutney

இப்போது அடுப்பில் மீதமிருக்கும் எண்ணெயை சுட வைத்து கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு கடுகு போட்டு பொரியவிட்டு கொள்ளுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும், நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த சட்னியை அதில் சேர்த்து எண்ணெய் வற்ற நன்கு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். எண்ணெயுடன் சட்னி சேர்ந்து பச்சை வாசம் போக கொதித்து வர காரசாரமான கெட்டியான மிளகாய் சட்னி நொடியில் தயாராகி விட்டிருக்கும். இதே முறையில் இதே போல நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாமே!

- Advertisement -