தேங்காய் சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க ஓட்டலில் செய்வது போலவே இருக்கும். இட்லி, தோசை மட்டுமல்ல சப்பாத்தி, பூரிக்கு கூட சூப்பரா இருக்கும்.

coconut-chutney1
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் தேங்காய் சட்னி ரொம்பவே சுலபமானது. இட்லி, தோசை மட்டுமல்லாமல் பூரி, சப்பாத்திக்கு கூட கெட்டியாக தேங்காய் சட்னி இப்படி வைத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது மட்டுமல்லாமல் வடை, போண்டா, பஜ்ஜி, உப்புமா, கிச்சடி போன்றவற்றுக்கு கூட தேங்காய் சட்னி தான் சரியான காம்பினேஷன் ஆக இருக்கும். இத்தகைய தேங்காய் சட்னி இந்த முறையில் ஒருமுறை அரைத்துப் பாருங்கள். ஓட்டல் சட்னியே தோற்றுப் போய்விடும். ருசியான தேங்காய் சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன? இதை எப்படி அரைக்க வேண்டும்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

coconut1

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 8, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், உடைத்த கடலை – அரை கப், முந்திரிப் பருப்பு – 10, புளி – சிறு நெல்லிக்காய் அளவிற்கு, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி தேங்காய் பூப்போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சில்லுகளாக துண்டு போட்டு வெட்டி வைத்துக் கொள்ளலாம். பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி 8 லிருந்து 10 வரை உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முழு முந்திரி பருப்பு 10 சேர்த்தால் அட்டகாசமான சுவையில் தேங்காய் சட்னி ருசிக்கும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

coconut-chutney

அதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சுற்று சுற்றி எடுத்ததும், முந்திரிப் பருப்பு, பெருங்காயத் தூள், உடைத்த கடலை, நெல்லிக்காய் அளவிற்கு புளி, சட்னிக்கு ஏற்றார் போல தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த சட்னியை இப்பொழுது தாளிக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி பொடிப் பொடியாக கிள்ளி நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

coconut-chutney0

இப்போது தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி வைத்தால் போதூம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் இந்த சட்னி ரொம்ப ரொம்ப ருசியான சைட் டிஷ் ஆக இருக்கும். ஹோட்டலில் செய்த தேங்காய் சட்னியை விட ரொம்பவே ருசியான இந்த சட்னியை நீங்களும் ஒரு முறை வீட்டில் இதே போல செய்து, வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -