தேங்காய் சட்னியின் ருசிக்கு இதெல்லாம் தான் காரணம் தெரியுமா? நீங்களும் இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. பிறகு இப்படியே தான் செய்வீங்க!

coconut-chutney1
- Advertisement -

சட்னி வகைகளில் மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த தேங்காய் சட்னி கூட சிலருக்கு சரியாக வராது. ஒரு தேங்காய் சட்னி கூட வைக்க தெரியவில்லையே! என்று புலம்புபவர்கள் கூட உண்டு. உடைத்த கடலை, தேங்காய், பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னி கூட நன்றாக தான் இருக்கும். ஆனால் அதனை பக்குவமாக என்னென்ன அளவுகளை கொண்டு செய்ய வேண்டும்? என்கிற சூட்சமம் தெரிந்திருக்க வேண்டும். தேங்காய் சட்னியில் அதீத ருசிக்கு காரணம் என்ன? ஹோட்டலில் செய்வது போலவே சுவையான தேங்காய் சட்னியை நாமும் இப்படி செய்து பார்க்கலாமே! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தேங்காய்

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, உடைத்த கடலை – அரை கப், பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 4, பூண்டு பல் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, கல் உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
தேங்காய் சட்னி அரைக்க முதலில் தேங்காயை உடைத்து அரை மூடி அளவிற்கு தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது துருவி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் முற்றிய தேங்காயாக இல்லாமலும், இலகிய தேங்காயாக இல்லாமலும் இருந்தால் தான் தேங்காய் சட்னி ரொம்ப ரொம்ப ருசியாக வரும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேங்காயை முதலில் சரி பார்த்து தேர்ந்தெடுங்கள்.

coconut-milk-waste

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளை போட்டு, அரை கப் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்து இரண்டு பச்சை மிளகாய்களை மீடியம் சைஸ் அளவிற்கு எடுத்து கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 பூண்டு பல், 2 வர மிளகாய், ஒரே ஒரு துண்டு இஞ்சி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி அதிகமானால் தேங்காய் சட்னியின் சுவை கெட்டு போய்விடும். ஒரு இன்ச் அளவிற்கு கொஞ்சமாக சேர்த்தால் போதும்.

- Advertisement -

பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழையும் நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். நான்கு சின்ன வெங்காயத்தை உரித்து அதில் இரண்டை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீதி 2 சின்ன வெங்காயம் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தூள் உப்பை விட கல் உப்பு சேர்ப்பது தேங்காய் சட்னிக்கு ருசியை கூட செய்யும். இப்போது மிக்ஸி ஜார் மூடியை மூடி நன்கு நைஸாக தேங்காய்ச் சட்டினியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

coconut-chutney

பின்னர் அதனுடன் தாளிக்க ஒரு கரண்டியை எடுத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் கால் டீஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் சீரகம், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக தாளித்தம் செய்து தேங்காய் சட்னியில் கொட்டவும். அவ்வளவுதாங்க! மணக்க மணக்க தேங்காய் சட்னி அதீத ருசியுடன் ஹோட்டலில் செய்வது போலவே இருக்கும், நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -