ஹோட்டலில் கொடுக்கும் தேங்காய் சட்னி போல சுவை வரவில்லையா? அப்படின்னா இப்படி அரைச்சி பாருங்க கண்டிப்பாக வரும்!

coconut-chutney-recipe
- Advertisement -

நாம என்னதான் முயற்சி செய்தாலும் ஹோட்டலில் கொடுக்கும் தேங்காய் சட்னி போல வரவில்லையா? அதெப்படி ஹோட்டலில் மட்டும் அவ்வளவு ருசியாக தேங்காய் சட்னி வைக்கிறார்கள்? என்று பலரும் ஆச்சரியப்பட்டு இருப்போம். நாமும் விதவிதமான முறைகளில் தேங்காய் சட்னி அரைத்தாலும் அந்த அளவிற்கு சுவை வருவதில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த முறையில் ஒரு முறை தேங்காய் சட்னியை அரைத்துப் பாருங்கள் இனி அடிக்கடி இதையே செய்வீர்கள். அந்த அளவிற்கு ருசி தரும் இந்த தேங்காய் சட்னியை எப்படி செய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

coconut-milk-waste

ஹோட்டல் தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – அரை மூடி, பொட்டுக் கடலை – கால் கப், பூண்டு பல் – 2, இஞ்சி – 4 துண்டு, சின்ன வெங்காயம் – ஐந்து, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி தழை – சிறிதளவு, சர்க்கரை – 1/2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

ஹோட்டல் தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
சுவையான தேங்காய் சட்னி அரைக்க முதலில் தேங்காயை பத்தைகளாக போடாமல் பூப்போல துருவி எடுக்க வேண்டும். அரை மூடி தேங்காயை முழுவதுமாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடிப்பகுதியில் இருக்கும் தோலை சேர்க்கக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கால் கப் அளவிற்கு பொட்டு கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக இஞ்சியை விட பூண்டு அதிகம் சேர்ப்பார்கள். பூண்டை விட இஞ்சியை தான் அதிகமாக சேர்க்க வேண்டும், அப்போது தான் தேங்காய் சட்னி ருசியாக இருக்கும்.

coconut-chutney0

எனவே இரண்டு பல் பூண்டு, அதே அளவிற்கு 4 பற்கள் இஞ்சித் துண்டுகளை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஐந்து என்ற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்ப்பது தான் ஹோட்டலில் கொடுக்கும் தேங்காய் சட்னிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இதனை தவிர்த்து விடக்கூடாது. பின்னர் காரத்திற்கு 2 பச்சை மிளகாய்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்க வேண்டும். தேங்காய் சட்னி நைஸாக அரைப்பட்டவுடன் இறுதியாக கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி இறக்கி விடுங்கள். கொத்தமல்லி சேர்த்ததும் அதிக நேரம் சுற்றக் கூடாது. பின்னர் இப்பொழுது தாளித்துக் கொட்ட வேண்டியது தான். அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள்.

coconut-chutney

தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரே ஒரு வரமிளகாயை கிள்ளி தாளியுங்கள். கறிவேப்பிலை ஒரு கொத்து போட்டு படபடவென பொரிந்ததும் அடுப்பை அணைத்து சட்னியில் கொட்டி சுட சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் ஹோட்டலில் கொடுக்கும் தேங்காய் சட்னி போலவே ருசி அதிகமாக இருக்கும்.

- Advertisement -