மல்லி சட்னி அரைக்க ரெண்டு நிமிஷம் கூட ஆகாது! எதையும் வதக்க வேண்டாம், அரைத்து தாளிக்க வேண்டியது தான் எப்படி இதை செய்வது?

malli-chutney
- Advertisement -

சதா என்ன சட்னி அரைப்பது? என்று யோசிப்பவர்களுக்கு இந்த மல்லி சட்னி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எதையும் இதில் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து தாளிக்க வேண்டியது தான், ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த மல்லி சட்னி சுவையிலும் குறையப் போவதில்லை. இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கக் கூடிய இந்த மல்லி சட்னி பச்சை சட்னி என்றும் கூறுவார்கள். இத்தகைய அருமையான மல்லி சட்னி எப்படி நம் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 8, இஞ்சி – ஒரு இன்ச், மல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, தக்காளி – ஒன்று, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – கால் ஸ்பூன், பூண்டு – 2 பல்.

- Advertisement -

மல்லி சட்னி செய்முறை விளக்கம்:
மல்லி சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லியை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அப்படியே முழுமையாக வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயத்தை சேர்க்கலாம். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம், இஞ்சி துண்டு, அலசிக் வைத்துள்ள மல்லித்தழை, சிறு துண்டு புளி மற்றும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே மிக்ஸியை இயக்கி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பச்சையாக அரைப்பதால் நல்ல பச்சை பசேலென இந்த சட்னி இருக்கும்.

- Advertisement -

பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இது போல பச்சையாக சட்னியை அரைக்கும் பொழுது நீங்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். தாளிக்க நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்கு காய விடுங்கள். அதனுடன் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து பின்னர் சட்னியுடன் சேர்த்து இறக்கி கொள்ளலாம். அல்லது சாதாரண எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய், பூண்டு ஆகியவற்றை நறுக்கி சேர்த்து தாளித்து பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து 2 நிமிடம் லேசாக வதக்கி விடுங்கள்.

வதக்கும் போது சட்னியின் பச்சை வாசம் நீங்கி ஓரளவுக்கு சட்னி நல்ல ஒரு சுவையைக் கொடுக்கும். பிறகு இதனை இட்லி, தோசை, அடை, ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இந்த சட்னி சுவையாகவும் இருக்கும். நீங்களும் இதே மாதிரி செஞ்சு வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -