வெறும் 4 பொருள் வைத்து இப்படி ஒருமுறை தக்காளி சட்னி செஞ்சு பாருங்க, சட்டிய கூட விடாம வழிச்சு சாப்பிடுவாங்க!

tomato-thakkli-chutney1_tamil
- Advertisement -

கஷ்டப்பட்டு தக்காளி சட்னி அரைச்சதெல்லாம் போதும். அவசரத்துக்கு இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட தொட்டுக்க வெறும் நாலு பொருள் இருந்தா போதும்! அசத்தலான தக்காளி சட்னி செய்து அசத்தலாம். இப்படி ஒரு முறை சட்னி வச்சு பாருங்க, சட்டியை கூட உங்க வீட்டில் யாரும் விடவே மாட்டாங்க, வழிச்சு சாப்பிடுவாங்க. அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த தக்காளி சட்னி ரெசிபி எப்படி தயாரிக்க போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன். சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை விளக்கம்

இந்த தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் நாலு பழுத்த பெரிய தக்காளி பழங்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து நான்கைந்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தையும் தோல் உரித்து இதே போல நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான மற்ற எல்லா பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் லேசாக காய ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஒரு ரெண்டு நிமிடம் கண்ணாடி பதம் வர வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசிய வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இந்த சட்னியில் பச்சை மிளகாய்க்கு பதிலாக மூன்று காய்ந்த மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை ஓரளவுக்கு மசிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் ஆறிய பொருட்களை சேர்த்து ரொம்பவும் நைசாக அல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே கூட கெட்டியாக இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கிட்டா அற்புதமாக இருக்கும். இல்லைன்னா நீங்க தாளிக்கவும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு மசாலா வறுவல் செய்வது எப்படி?

தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து தாளிச்சு கொட்டினால் போதும், ருசி அபாரமாய் இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, கொஞ்சம் கூட சட்னி வீணாக போகவே செய்யாது. இந்த சட்னி செய்வதற்கு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. வெங்காயம், தக்காளி நறுக்கினால் அஞ்சே நிமிஷத்தில் சட்னி ரெடி! வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -