குக்கரில் 2 விசில் விட்டால் போதும். வீடே மணக்கும் அளவிற்கு சூப்பரான தக்காளி குருமா தயார்.

thakkali-kuruma
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு தக்காளி குருமா எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் அரவையை அரைத்து குக்கரில் தாளித்து ஊற்றி, 2 விசில் வைத்தால் போதும். மணக்க மணக்க குருமா தயாராகி இருக்கும். இந்த ஸ்பெஷல் குருமாவை எப்படி வைப்பது நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோமா.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த பூண்டு பல் – 8, இஞ்சி துண்டு – 2 இன்ச், கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 1/4 கப், சோம்பு – 1 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், ஏலக்காய் – 1, லவங்கம் – 1, பட்டை – 1, முந்திரிப்பருப்பு – 6, மீடியம் சைஸ்  பழுத்த தக்காளி பழம் – 6 (துண்டு துண்டுகளாக வெட்டியது), இந்த எல்லா பொருட்களையும் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் முந்திரிப் பருப்புக்கு பதில், பாதாம் பருப்பு சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் 1 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வையுங்கள். 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1, லவங்கம் – 2, கல்பாசி மிகச் சிறிய துண்டு – 1, சோம்பு – 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்கவேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் மல்லித் தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து முப்பது செகண்ட் வரை வதக்கி உடனடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் ஊற்றி 3 லிருந்து 4 நிமிடங்கள் தக்காளியின் பச்சை வாடை போக வதக்குங்கள். (தக்காளியோடு மட்டுமல்லாமல் மிக்ஸி ஜாரில் நாம் போட்டிருக்கும் எல்லாப் பொருட்களுமே பச்சையாக சேர்த்தது தான். அதனுடைய பச்சை வாடையும் நீங்க வேண்டும்)

- Advertisement -

அதன் பிறகு குருமாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு மேலே கருவேப்பிலை தூவி, குக்கரை மூடி 2 விசில் விட்டால் போதும். மணக்க மணக்க தக்காளி குருமா தயார். வழக்கமாக வைக்கக்கூடிய குருமாவை விட இந்த குழுவுக்கு சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி சுட சுட இந்த குருமாவை அப்படியே இட்லி தோசை மேல் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். தேவைப்பட்டால் இதை புலாவுக்கும் தொட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பாருங்க.

- Advertisement -