அரைச்சு விட்ட தக்காளி குருமா இது. குக்கரில் வெறும் 2 விசில் விட்டால் இரண்டு வீடு தாண்டியும் இந்த குருமா வாசம் வீசும்.

thakkali-kuruma
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி குருமாவை போல ஒரு சைடிஷ் நிச்சயம் வேறு இருக்கவே முடியாது. ஒவ்வொரு ஊர்களில் தக்காளி குருமா ஒவ்வொரு விதமாக வைப்பார்கள். இந்த தக்காளி குருமாவுக்கு பெயர் அரைத்து விட்ட தக்காளி குருமா. கொஞ்சம் வித்தியாசமாக வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்து அதன் பின் இந்த குருமாவை செய்ய போகின்றோம். இந்த குருமாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் எல்லாம் என்னென்ன, அதை பக்குவமாக சுலபமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1 சிறிய துண்டு, கிராம்பு – 3, மிளகு – 7, சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொரிய விட வேண்டும். அதன் பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, போட்டு கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு நறுக்கிய தக்காளிப் பழம் – 4, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு குருமாவுக்கு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாடை முழுமையாக நீங்கட்டும்.

இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டேபிள் ஸ்பூன், போட்டு தண்ணீர் எதுவும் ஊட்டாமல் இதை கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் குக்கரில் வழங்கிக் கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளி சேர்ந்த விழுது பச்சை வாடை நீங்கி வதங்கி இருக்கும். அதையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய உடன் இந்த விழுதை ஏற்கனவே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும், தேங்காய் போட்டு கடலை சோம்பு அரவையோடு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த விழுதை மீண்டும் குக்கரில் ஊற்றி, குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விடுங்கள். இதில் வர மல்லி தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு நன்றாக கலந்து விட்டு கொதிக்க வையுங்கள். உப்பு காரம் சரி பார்த்து விட்டு இதன் மேலே கொத்தமல்லி தலையை தூவி குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வைக்க வேண்டும். இதனுடைய வாசம் விசில் வரும்போது அவ்வளவு சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சுட்ட கத்திரிக்காய் தொக்கு பாரம்பரிய முறையில் வீட்டில் எளிதாக செய்வது எப்படி? இனிப்பும், புளிப்புமாக இருக்கும் கத்திரிக்காய் தொக்கு இப்படி செஞ்சா இட்லி, தோசைக்கு அருமையாக இருக்குமே!

பிரஷர் இறங்கியவுடன் குக்கரை திறந்து பாருங்கள். குருமாவுக்கு மேலே எண்ணெய் திரிந்து வந்து நாம் செய்த குருமா அட்டகாசமாக கிடைத்திருக்கும். சுட சுட இட்லிக்கு மேலே ஊற்றி சாப்பிட்டால் அத்தனை ருசி. சுட சுட கல் தோசைக்கும் இது செம சைடிஷ் ஆக இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -